விஜய் கட்சியில் சமுத்திரகனி... அவரே சொன்ன தகவல்!

Samuthirakani and Vijay
Samuthirakani and Vijay

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியில் இணைவது குறித்து இயக்குனர் சமுத்திரகனி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். இவரின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி என்றாலும் கூட இவர் இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நலப்பணிகளை செய்து வந்த விஜய், தானே களத்தில் இறங்கலாம் என முடிவெடுத்தார். இதனையடுத்து படிப்படியாக அனைத்து தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கியது, வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என களப்பணிகளில் ஈடுபட்டார். இதன் மூலம் மக்களும் விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி தமிழக வெற்றி கழகம் உருவாக்கி, இனி முழு நேர அரசியல் பணிகளை செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் இவரது அரசியல் வருகைக்கு பல திரைபிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனியும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு சீரியல் டிஆர்பி.. இந்த வார டாப் 10 சீரியல்ஸ்!
Samuthirakani and Vijay

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் நல்ல மனிதர். அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். அவர் என்னை பிரசாரத்துக்கு கூப்பிடவில்லை என்றாலும். நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன் என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com