நடிகை சமந்தா குடும்பத்தில் அவரது இரண்டாவது திருமணம் குறித்து விவாதம் செய்து வருவதாக பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.
இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சிட்டாடல் சீரிஸ் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே சமயத்தில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தார். தற்போதுதான் சமந்தா ஆரோக்கியமாகி வருகிறார். இந்த சமயம் பார்த்து மன ரீதியான அழுத்தம் அவருக்கு அதிகமாக வருகிறது. ஆகையால் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் சமந்தா குறித்து பேசியிருக்கிறார். “சமந்தாவின் வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு சோகம் நடந்தது. அவரது தந்தை உயிரிழந்துதான் அது. அவர் இறந்த பிறகு சமந்தாவின் தாயும், சகோதரர்களும் வீட்டில் அமர்ந்து பேசினார்கள். அப்போது சமந்தா இனி இப்படி தனியாகவே இருக்கக்கூடாது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்களது உறவினர் வட்டாரத்திலேயே அவருக்கு ஒரு பையனையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.” என்றார்.
இதற்கு ரசிகர்கள் வேறுவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது ‘உங்களுக்கு எப்படி தெரியும்? அவர்கள் குடும்பத்துடன் நீங்கள் கலந்தாலோசித்திர்களா?’ என்றும், ‘இது சமந்தாவிற்கு தெரியுமா?’ என்றும், ‘இந்த உலகத்துல யாருக்கும் தெரியாததலாம் உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.’ என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.