
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், 'ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார், பெங்குயின், அண்ணாத்தே, மாமன்னன், சைரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் மறைந்த நடிகை சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் வருண் தவான் ஜோடியாக 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் அன்று வெளியான இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்த, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலை இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தேனிலவுக்கு செல்லாமல் திருமணமான ஒரு வாரத்திலேயே 'பேபி ஜான்' ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியது. மேலும் இந்த படத்தின் ப்ரமோஷனுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதை பார்த்து வியந்த அவரது ரசிகர்கள் அவருக்கு சினிமா மேல் இருக்கும் பக்தியை, ஈடுபாட்டையும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு செய்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் ‘ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த படங்களை முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேரமும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட கீர்த்தி சுரேஷ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யாமல், வரும் படங்களை எல்லாம் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலகப் போவதாக பரவும் அதிர்ச்சி தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து வெற்றி பெற்றுள்ளதால் நடிகை கீர்த்தி சுரேஷ்ம் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.