

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாகத் இருக்கும் நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் , கோலிவுட் வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள செய்தியாக உள்ளது. இந்த ஜோடி கிட்டதட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
இதற்கு முன்னர் சிம்புவும் நயனும் முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு 'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை சிம்புவே எழுதி இயக்கி இருந்தார். அதிக எதிர்பார்ப்பைக் கொண்ட வல்லவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக்கியது. இந்த திரைப்படத்தின் வெற்றி மூலம் சிம்பு - நயன் கூட்டணி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டதாக மாறியது.
அதன் பின்னர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு சிம்புவும் - நயனும் இணைத்து 'இது நம்ம ஆளு' என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தில் இவர்களுடன் ஆண்ட்ரியா , சூரி , ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் , பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் அப்போது வெளியாகி சராசரி வெற்றியை மட்டுமே பெற்றது.
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற ஜோடியாக இருந்தாலும் இந்தக் கூட்டணி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்காமல் , நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டனர். இவர்களின் முதல் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த பின்னர் 3 ஆம் திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளனர். இந்த திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். இவர் பிரதிப் ரங்கநாதன் , மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற 'டூட்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை அவர் இயக்கப் போவதாக பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் , அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் வேறு ஒரு இயக்குனருக்கு சென்றது.
கீர்த்தீஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சிம்பு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு அதிகாரி வேடத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவருகின்றன. இந்த திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்குவதை பற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும், 'வட சென்னை' திரைப்படத்தின் யுனிவர்சில் உள்ள 'அரசன்' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தனுஷ் நடித்துள்ள படத்தின் முக்கிய கிளை பாகம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் உள்ளது. இதற்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான 'தக் லைப்' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறாததால் , அரசன் படத்தின் வெற்றியையே சிம்பு மலைபோல் நம்பியுள்ளார்.
நடிகை நயன்தாரா , தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் -2 'திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.