காத்திருந்து பழி தீர்த்தாரா சிவ கார்த்திகேயன்..? கோலிவுட்டில் பரபரப்பினை கிளப்பிய ட்வீட்..!

சர்தார் 2 மற்றும் மண்டாடி பட மோதலில் வெடித்த சிவகார்த்திகேயன் சூர்யா பனிப்போர்.
sivakarthikeyan and surya
sivakarthikeyan and suryaFacebook
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பகிர்ந்துள்ள இரு X பதிவுகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் சிலர் சிவா காத்திருந்து பழி தீர்த்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடைபெறும் பனிப்போர் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். பெரிய வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் மூலம் சூர்யாவின் மார்க்கெட்டையும் முந்தி இருந்தார்.

2022 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படமும், சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' திரைப்படமும் வெளியாகின. அப்போது சர்தார் திரைப்படத்திற்கு நல்ல ரிவ்யூ கிடைத்து , பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பையும் பெற்றிருந்தது. அதே நேரத்தில் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

அந்த காலகட்டத்தில் நடிகர் சூர்யா , சர்தார் திரைப்படத்திற்கு “Good content always wins big” என்று குறிப்பிட்டு அந்த திரைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதே நேரம் பிரின்ஸ் திரைப்படத்திற்கு "heartly wishes Team" என்று ஒரு சம்பிரதாய வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்திருந்தார். சூர்யா சர்தார் திரைப்பட வாழ்த்தின் போது குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் "நல்ல திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறும்" என்ற வார்த்தைகள் சிவகார்த்திகேயன் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

தற்போது கார்த்தியின் சர்தார்-2 திரைப்படமும், கார்த்தி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்த சூரி நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களில் மண்டாடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் , சர்தார் -2 திரைப்படம் வசூலில் சிறிது பின்தங்கியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலை வெளியிடும் பிரபல சாக்னிக் (sacnik) தளத்தின் அறிவிப்புகளின் படி சர்தார் -2 திரைப்படம் 2 நாட்களில் ₹10.65 கோடி வசூல் செய்துள்ளது , மண்டாடி திரைப்படம் ₹15.85 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. வரும் வார இறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

siva surya controversy
sivakarthikeyan controversy twitX

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் சூரியின் மண்டாடி திரைப்படத்தை பாராட்டி, அதற்கு வாழ்த்துக்களை கூறியது அதிக கவனம் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் மிகவும் நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் சூரி முக்கியமானவர். முந்தைய அவரது திரைப்படங்களில் சூரிக்கு தனக்கு இணையான முக்கியத்துவத்தையும் கொடுத்து இருப்பார்.

சிவா தனது பதிவில் "சிறப்பான தகவலின் படி , கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையாகவே பலனளித்துள்ளன. Good content always wins big என்று முன்பு சூர்யா பயன்படுத்திய வார்த்தையும் சேர்த்து , வாழ்த்துக்கள் ! என் அன்பு அண்ணன் மற்றும் முழுக் படக்குழுவினருக்கும் , பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி! " என்று பதிவிட்டுள்ளார்.

அதே நேரம் சிவகார்த்திகேயன் சர்தார் - 2 திரைப்படத்திற்கு 'Best wishes ' என்று வெறும் கடமைக்கு ஒரு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் சிவகார்த்திகேயன் 4 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சர்தார் 2 விமர்சனம்: கார்த்திக்கு வெற்றி கிடைத்ததா? பயோவெப்பன் மிஷன் வசூல் சாதனை படைக்குமா?
sivakarthikeyan and surya
logo
Kalki Online
kalkionline.com