

அண்ணனுக்கு எட்டாது, தம்பிக்கு எட்டும் அது என்ன? என ஒரு விடுகதை பிரபலம். அதன் உல்டா வெர்சன் தான் சூர்யா, கார்த்தி ஹிட்ஸ். அண்ணன் சூர்யாவுக்கு. கருப்பு,விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரண்டு ஹிட் படங்கள், தம்பி கார்த்தி மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய இரு படங்களும் கமர்ஷியலாகப் போகவில்லை. அதனால் சர்தார் 2 படத்தின் வெற்றி அவருக்கு ரொம்பவே முக்கியம். வெற்றி அடைந்தாரா?என்பதைப் பார்ப்போம்.
சர்தார் முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் பார்க்கலாம். இரண்டும் வெவ்வேறு கதைகள். இரண்டிலும் அப்பா, மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். அவ்வளவுதான்.
ஸ்பாய்லர் அலெர்ட்
உலகையே அழிக்கக்கூடிய பயோ வெப்பனை ஜப்பான் நாடு உருவாக்குகிறது. அதை ஒரு நாட்டுக்கு விற்கிறது. அந்த பயோ வெப்பனை விமானத்தில் எடுத்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விமானம் விழுகிறது. அந்த பயோவெப்பனை செயலற்றதாக ஆக்க ஜப்பானில் இருந்து தான் மருந்து கொண்டு வர வேண்டும்.
ஜப்பான் போக தகுதியான ஸ்பை ஏஜெண்ட் யார்? என்று விசாரிக்கையில் நாயகன் தான் என்பது தெரிய வருகிறது. நாயகனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
வில்லன் அந்த பயோவெப்பனைக் கைப்பற்றத் துடிக்கிறான். நாயகன் பயோவெப்பனை செயல் இழக்க வைக்கும் மருந்தை ஜப்பானில் இருந்து கொண்டு வர வேண்டும். இந்த மிஷனில் யார் ஜெயித்தார்கள்?நாயகனின் அப்பாவிற்கு இந்த மிஷனில் என்ன வேலை?என்பது மீதி திரைக்கதை.
நாயகனாக கார்த்தி அப்பா, மகன் இரு வேடங்களில் கெட்டப்பில், நடிப்பில், உடல் மொழியில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். நல்ல நடிப்பு.
வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா கலக்கி இருக்கிறார். ஆனால் ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, பினிஷிங்க் சரி இல்லையே என சொல்லத் தோன்றுகிறது.
ஏஜெண்டாக வரும் மாளவிகா மோகனன், அவரது மகளாக வரும் ஆஷிகா ரங்கநாத், ரசிஜா விஜயன், நாயகனின் வளர்ப்புத் தந்தையாக வரும் முனீஷ்காந்த், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, யோகிபாபு, நிழல்கள் ரவி, தேவதர்ஷினி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
சாம் சி எஸ் சின் இசையில் 5 பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை ரகம். சில இடங்களில் காது வலிக்கிறது. விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் 179 நிமிடங்கள் ரன்னிங்க் டைம். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.
சி ஜி ஒர்க்ஸ், வி எப் எக்ஸ் ஒர்க்ஸ் இன்னமும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கதை, திரைக்கதை இயக்கம் பி எஸ் மித்திரன்.
சபாஷ் டைரக்டர்
1. நாயகனுக்கு ஜோடி இல்லை, டூயட் இல்லை. பாட்டு இல்லை என்பதே பாராட்டுக்குரிய விஷயம். ஆக்சன் திரில்லர் படத்தில் ஆக்சன் போதும் என நினைத்தது.
2. முதல் பாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில் வாட்டர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்குநர் இதில் ஆண்ட்டிபயோடிக் மருந்துகளை மனிதர்கள் அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பேசுகிறது. புதிய டாபிக்.
3. ஸ்பை ஏஜெண்ட்டாக வரும் மாளவிகா மேனன் ஒரு ஆக்சன் சீக்வன்சில் கலக்கி இருக்கிறார்.
4. பயோவெப்பனைப் பாதுக்காக்க சாவியை கத்தி வடிவில் உருவாக்கி 3 வெவ்வேறு ஏஜெண்ட்கள் 3 பேரிடம் பிரித்துத்தருவது ஆங்கிலப்படத்தில் இருந்து சுட்டிருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. முதல் பாகம் அளவு இரண்டாம் பாகத்தில் திரைக்கதை பின் பாதியில் வலுவாக அமைக்கப்படவில்லை. படத்தின் நீளமும் அதிகம்.
2. வில்லனின் கேரக்டர் டிசைன் வலுவாக இல்லை. சரியாக வடிவமைக்கப்படவில்லை. ஒரே மாதிரி டெம்ப்ளேட் நடிப்பு சலிப்படைய வைக்கிறது. ஸ்பைடர் என்ற படத்தில் நடித்த அதே நடிப்பு.
3. 1980 களில் கேப்டன் விஜய்காந்த், ஆக்சன் கிங் அர்ஜூன் அடித்துத் துவைத்துப்போட்ட தேசபக்தி கான்செப்ட், நாட்டைக்காப்பாற்றும் கதை அரதப்பழசான விஷயம்.
4. சாம் சி எஸ் பின்னணி இசையில் பல இடங்களில் மிஷின் இம்ப்பாசிபிள் ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டிருக்கிறார்.
5. இடைவேளை முடிந்து பின் பாதியில் 20 நிமிடங்களில் படமே முடிய வேண்டியது. ஒரு மணி நேரம் இழுத்து விட்டார்கள்.
ரசித்த வசனங்கள்
1. அப்பா பலசாலி, மூளைக்காரன். பையன் கூல் Guy, ஆனா Tough ஆனவன். ஆனா ஷோ ஸ்டீல் நான் தான். ஏன்னா அவங்க டார்கெட்டே நான் தான்.
2. டெக்னிக்கலி நான் தான் நல்லவன். அவங்கதான் கெட்டவங்க.
3. இப்போ கேள்வி என்னனா? ஜெயிக்கப்போவது நல்ல வில்லனா?கெட்ட வில்லனா?
4. நம்ம தேசம் அபாயத்தில் இருக்கு. நமக்கு இம்மீடியட்டா ஒரு ஏஜெண்ட் வேணும்.
5. அந்தக்கூத்தாசிப்பையன் வர்றதுகுள்ளே தைப்பூசமே வந்துடும். வரச்சொல்லு அவனை.
போஸ் இப்போ வேல் தூக்கிடுச்சு. இப்போ எல்லாக்காவடிகளையும் வழி நடத்தும் லீடர் அவர்.
6. மெட்ராஸ்ல இருந்து ஆள் வந்திருக்கு , உடனே போகனும்.
இப்படிக்காவடியை பாதிலயே விட்டுட்டுப்போனா எப்படி?
நீங்கதானே சொல்லிக்குடுத்தீங்க?செய்யும் தொழிலே தெய்வம்னு. நான் போயாகனும்.
7. முப்பது கோடிப்பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ட்ரெய்னை வெச்சு எப்படி முடிக்கப்போறோம்?
8. மிஷின் அக்கம்ப்பளிஷ்டு சக்சஸ்புல்லி.
இல்லை சார் எனக்குப்பெருசா தோத்துட்டு நிக்கற மாதிரி தோணுது.
9. போஸ், அத்தனை உயிர்களையும் நீ தான் காப்பாத்தி இருக்கே. அதுக்கான விலையைக் கொடுத்துதான் ஆகனும்.
10. இது ஒரு சாபம். என் தலைக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு. சாகறவரை என்னை விட்டுப்போகாது போல.
11. இனிமே இது நடக்காதில்ல?
கண்டிப்பா நடக்கும், பெண்ட்டாஸ்டிக்கா, மார்வெலசா, டிலைட்புல்லா நடக்கும். ஏன்னா இப்போ அதைப்பண்ணப்போறது நான்.
12. ஐ ஆம் அன் ஸ்டாப்பபிள்.
13. இது போஸ்க்கு தெரிஞ்சா திரும்பி வருவான். தானா வருவான்.
14. விட சொல்றியா?
நம்ப சொல்றேன்.
15. நான் உன்னோட Fan தெரியுமா? உனக்காக வெயிட் பண்றேன் தெரியுமா?
16. வா, உனக்கு நான் காட்றேன். fan boy சம்பவம்னா என்ன? எனக் காட்றேன்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
கல்கி கமெண்ட் - பிரமாதமான முதல் பாதி, ரொம்ப சுமாரான பின் பாதி. முதல் பாகம் அளவு ஹிட் ஆகாது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் செலவு அதிகம். ஆனால் வீக்கான ரைட்டிங்க்.
சர்தார் 2 திரைப்படம் பயோவெப்பன் மற்றும் ஆண்டிபயோடிக் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான முதல் பாதியைக் கொடுத்தாலும், பலவீனமான இரண்டாம் பாதியால் சராசரி அனுபவத்தையே தருகிறது என்பதை வாசகர் உணர்வார்.