சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்… அமரன் பட வெற்றிதான் காரணமாம்!

Sivakarthikeyan
Sivakarthikeyan
Published on

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

3 என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன், மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என்று படிபடியாக நல்ல படங்களில் நடித்து திரைத்துறையில் சாதித்தவர். அந்தவகையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான அமரன் படம் 200 கோடி வசூலைக் கடந்து வருகிறது. ஒரு மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

கோட் படத்தின் தளபதி விஜய் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று சிவாவிடம் துப்பாக்கியை எந்த நேரத்தில் கொடுத்தார் என்று தெரியவில்லை. இந்த நிகழ்வுக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் அடுத்த படமே ஹிட்டானது.

இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பின் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பீகாரில் தாய்ப்பாலில் அதிக அளவு ஈயநச்சு கலந்துள்ளது! இந்தியாவில் ஈய பாதிப்பினால் ஆண்டு தோறும்165,000 பேர் இறக்கின்றனர்!
Sivakarthikeyan

இப்படி பெரிய பெரிய இயக்குநர்களுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். இந்த அத்தனைப் படங்களும் அதிக வசூல் ஈட்டும், அதாவது 150 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர்கள் கணிக்கின்றனர்.

இதனால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்திருக்கிறார். அதாவது இனி வரும் படங்களுக்கு சுமார் 50 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். இவ்வளவு சம்பளத்தை தனுஷ், சூர்யா போன்றவர்களே வாங்கி வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. 100 கோடி பட்ஜட் என்று பார்த்தாலும் கூட 50 கோடி சம்பளம் வாங்குவது அதிகம். இது கொஞ்சம் ஓவர்தான். என்று ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர், அவர் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்தான் என்று விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
அவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் தெரியுமா?
Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்தபோது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். ஆனால், அவர் நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் பல சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியதாயிற்று. பல ரூமர்ஸ் இவரைச் சுற்றி வந்தன. அதுமூலம் சில ரசிகர்கள் இவரை காரணமே இன்றி ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால், அதையும் மீறி அவர் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் என்பதே பாராட்டிற்குரிய விஷயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com