அவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் தெரியுமா?

Side effects of eating avocado
Side effects of eating avocado
Published on

வகேடோ பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். அதில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினரல்கள், நல்ல கொழுப்புகள் போன்ற பல ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இருந்தபோதும் அதன் மூலம் சில பக்க விளைவுகளும் உண்டாவதுண்டு. அவை என்னென்ன என்பதைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மைக்ரைன் தலைவலி: மைக்ரைன் தலைவலி உள்ளவர்கள் அவகேடோ பழம் சாப்பிட்டால் தலைவலி மேலும் அதிகரிக்கக் கூடும். கூடவே வாந்தி, குமட்டல் மற்றும் ஒளி உணர் திறனில் சென்சிட்டிவிட்டி (Light sensitivity) போன்ற கோளாறுகளும் உண்டாகும். இது அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக் காரணிகளாகிவிடும்.

2. ஒவ்வாமை: சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாக உடலில் அரிப்பு, வீக்கம், தடிப்பு உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றக்கூடும். அதற்கான பேட்ச் (Patch) டெஸ்ட் செய்தும் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
எரிசக்தி பாதுகாப்பில் தனி நபர்களின் பங்கு!
Side effects of eating avocado

3. வீக்கம்: அவகேடோ பழத்தில் நார்ச்சத்து அதிகம். சிலருக்கு இதன் காரணமாக வயிற்றில் வாய்வு, வீக்கம் போன்ற அசௌகரியங்கள் உண்டாகலாம்.  சென்சிட்டிவிட்டி செரிமான இயல்புடையவர்கள் இந்தப் பழம் சாப்பிடும்போது கவனமுடன் இருப்பது அவசியம்.

4. எடை அதிகரிப்பு: அவகேடோ பழத்தில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளது போல கலோரியின் அளவும் அதிகம். இப்பழத்தை அதிகளவு உட்கொள்ளுதல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, மற்ற ஊட்டச்சத்துக்கள் உடைய சரிவிகித உணவுடன் குறைந்த அளவு அவகேடோ சேர்த்துக்கொள்ளவது ஆரோக்கியம் தரும்.

5. மூச்சுத் திணறல்: லேடெக்ஸ் (Latex) அலர்ஜி  உள்ளவர்கள் அவகேடோ பழம் சாப்பிட்டால் குறுக்கு எதிர்வினை ஏற்பட்டு உடலில் எரிச்சல், வீக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புண்டாகும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாக்கும் மறுபயன்பாட்டு டயப்பர்களின் நன்மைகள்!
Side effects of eating avocado

6. மருத்துவ சிகிச்சையில் குறுக்கீடு: அவகேடோ பழத்தில் வைட்டமின் K உள்ளது. இது இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க (Blood thinning) மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்களின் இரத்தத்தில் கலக்கும்போது, அம்மருந்துடன் சேர்ந்து வினைபுரிந்து மருந்தின் செயல்பாட்டுத் திறனை குறைத்துவிடும். எனவே, அவர்கள் அவகேடோ பழத்தை உட்கொள்ளும் முன்பு மருத்துவரை கலந்தாலோசிப்பது நலம்.

7. ஜீரணக் கோளாறு: அவகேடோ பழத்தில் கொழுப்புச் சத்துக்கள் அதிகம். இது சிலருக்கு நெஞ்செரிச்சல் வரவும் வயிற்று அமிலம் ரெஃபிளக்ஸ் (Reflux) ஆகவும் செய்யும். இதனால் வயிற்றில் உணவு ஜீரணமாவதில்  அசௌகரியங்கள் உண்டாகும். செரிமானப் பிரச்னையுள்ள கர்ப்பிணிப் பெண்கள் அவகேடோவைத் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com