அமரன் சிவகார்த்திகேயன்... SK 21 பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

SK 21 Amaran
SK 21 Amaran
Updated on

சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 படத்தின் டீசரும், டைட்டிலும் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் SK 21 படம் வெளியாகும்.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டிலும், டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்க்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதே பெயரில் 1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் அமரன் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசரை பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் 'மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விஜய் கட்சியில் சமுத்திரகனி... அவரே சொன்ன தகவல்!
SK 21 Amaran

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமரனை கொண்டாடி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com