தவறான வதந்திகளுக்கு பொன்னியின் செல்வன் சோபிதா அளித்த சூப்பர் பதில்!

sobhita dhulipala
sobhita dhulipala
Updated on

டிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், சோபிதா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கோலிவுட்டில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சோபிதா துலிபா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரான நாகசைத்தன்யா, நடிகை சமந்தாவுடன் 'Ye Maaya Chesave திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,  குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நாக அர்ஜுனா, நாக சைத்தன்யா, அமலா, சமந்தா என கூட்டுகுடும்பமாக வசித்து வந்த இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி உலாவி வந்தன.

பிக்பாஸ் தெலுங்கு சீசனில் மாமனாருக்கு பதில் ஒரு நாள் ஹோஸ்டாக களமிறங்கினார் சமந்தா. அந்த அளவிற்கு ஒற்றுமையாக இருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென ஒரு பூகம்பம் வெடித்தது. இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் திடீர் என விவாகரத்து பெற்று பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தனர். 

இந்நிலையில், சமந்தாவை பிரிந்த ஒரே வருடத்தில் நாகசைதன்யா பிரபல பாலிவுட் நடிகையும், பொன்னியின் செல்வம் பட புகழுமான சோபிதா துலிபாலாவை காதலித்ததாக கூறப்பட்டது. இருவரும் வெளிநாடுகளில் இணைந்து எடுத்து கொண்ட, போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

தற்போது இதுகுறித்து பேசிய சோபிதா துலிபாலா, உண்மை என்ன என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும், தெரியாத தகவல்களை எழுதுபவர்களுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறன். நான் எந்த தவறும் செய்யாத போது அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com