சூரியின் அடுத்த அவதாரம்... 'கொட்டுக்காளி' ரிலீஸ் எப்போது தெரியுமா?

Kottukkaali
Kottukkaali
Updated on

இயக்குநர் வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்திற்கு பிறகு அடுத்தகட்டமாக நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடிக்கும் ’கொட்டுக்காளி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா‘ படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படமான கொட்டுக்காளி-ல் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன்அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி, சர்வதேச கவனம் பெற்ற ’கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு ’கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூரி முதல்முறையாக விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த நடிகர் சூரி, விடுதலை படத்தில் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். விடுதலை படத்தின் 2வது பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து கருடன் படமும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைக்கு அப்பாவான யூடியூப்பர் இர்பான்... குவியும் வாழ்த்துக்கள்!
Kottukkaali

துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார். ந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விடுதலை படத்தையும் தாண்டி ஆக்சன் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை சூரியை இப்படி பார்த்ததே இல்லையென ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தட்டினர்.

இந்த நிலையில், கொட்டுக்காளி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூரியின் நடிப்பு அவரை நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு சிறந்த அங்கீகாரம் பெற்ற இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது, மேலும் எந்த தேதியில் படம் வெளியாகவுள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com