பெண் குழந்தைக்கு அப்பாவான யூடியூப்பர் இர்பான்... குவியும் வாழ்த்துக்கள்!

Youtuber irfan
Youtuber irfan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

புகழ்பெற்ற யூடியூபரும் குக் வித் கோமாளி பிரபலமுமான இர்பான் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ரோட்டு கடைகளில் சாப்பிட்டு ரிவ்யூ போட்டு கொண்டு வந்தார். தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சமைத்து அசத்தி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி இருக்கையில் இவர் ரசிகர்களுக்காகவும், கண்டெட்டுக்காகவும் செய்த காரியத்தால் சமீபத்தில் சிக்கலில் மாட்டி கொண்டார்.

இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். குழந்தை கருவில் இருக்கும் போதே சிலர் இதன் பாலினத்தை அறிந்து, சில காரணங்களால் அந்த குழந்தையே கருவிலே அழித்து வடுகின்றனர். இதனால், குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால், யூடியூப்பர் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்று பாலினம் பற்றி தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அதனை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இதனால் பல சிக்கலில் சிக்கி இது தொடர்பான வீடியோவை டெலிட் செய்து மன்னிப்பு கேட்டார். சுகாதாரத்துறையும் இவரின் மன்னிப்பை ஏற்று பிரச்சனையை சுமூகமாக முடித்தது.

இதையும் படியுங்கள்:
இனியாவை காப்பாற்றிய ராதிகா... குற்ற உணர்ச்சியில் பாக்கியா..!
Youtuber irfan

தற்போது குக்வித் கோமாளியின் 5வது சீசனில் பங்கேற்று கலக்கி வரும் இவர், அதன் மூலம் மேலும் ட்ரெண்டாகி வருகிறார். தன்னுடைய சமையல் திறமையையும் காட்டி வருகிறார். இதுதவிர அவர் சினிமாவில் முதன்முறையாக நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி சினிமா, சின்னத்திரை என பிசியாக உள்ள இர்பானுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் விரலை பிடித்தவாரு எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் இர்பான். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com