'SpiderMan - Brand New Day' விமர்சனம்: டாம் ஹாலண்டின் மிரட்டல் ஆக்ஷன் ஒர்க்கவுட் ஆனதா?

மார்வெலின் புதிய ஸ்பைடர்மேன் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா இல்லையா? முழு சினிமா பார்வை!
ஸ்பைடர்மேன் 4
ஸ்பைடர்மேன் 4
Updated on

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 38 வது படம் இது. எம் சி யு ஸ்பைடர் மேன் வரிசையில் நான்காவது படம்(ஸ்பைடர்மேன் 4). முதல் மூன்று படங்களைப் பார்த்திருந்தால் இது நன்கு கனெக்ட் ஆகும். அட்லீஸ்ட், மூன்றாவது படமான (3ம் பாகம்) ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் (2021) படத்தையாவது பார்த்திருந்தால் தான் இந்தப்படம் புரியும்.

225 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியான இந்தப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்...

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் தன்னைப் பற்றிய நினைவுகளை தன் நண்பர்களிடம், காதலியிடம், உலகத்தாரிடம் மறைத்து விட்டு தன் புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்.

நியூயார்க் நகரில் இருக்கும் குற்றவாளிகளைக் கவர் பண்ணி அவர்களைப் போலீசில் ஒப்படைக்கும் பணியில் நாயகன் ஈடுபடுகிறான். அப்போது நாயகன் அடி மனதில் ஒரு பாதிப்பு நிகழ்கிறது. கண்கள் கறுப்பாகிறது. அப்போதுதான் நாயகனுக்கு தன் ஆழ் மனதை யாரோ வசியம் செய்கிறார்கள்; டெலிபதி முறையில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஜெயிலில் இருக்கும் குற்றவாளியான ஸ்கார்பியன், 'நோக்கு வர்மம்' என்னும் 'ஹிப்னாடிசம்' மூலம் ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான். இவனை இப்படி இயக்குவது யார்? ஸ்கார்ப்பியன் செய்ய இருக்கும் டாஸ்க் என்ன? என்பதை நாயகன் கண்டுபிடிக்கக் களம் இறங்குகிறான்.

வி மேக்ஸ் என்னும் பவரை அடையத்தான் 'வில்லி' இத்தனை வேலைகளும் செய்கிறாள். அந்தப் பவர் கிடைத்து விட்டால் நியூயார்க் நகரையே ஆளலாம். டேமேஜ் கண்ட்ரோல் என்ற இடத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி நியூயார்க் நகரையே தன் வசப்படுத்தி வி மேக்சை அடைய வில்லி முயல்கிறாள். வில்லியின் இந்த முயற்சிக்கு நாயகன் குறுக்கே நிற்கிறான்.

ஸ்பைடர்மேன் 4
ஸ்பைடர்மேன் 4

நாயகனை சமாளிக்க வில்லிக்குக் கைவசம் இருக்கும் ஒரே யுக்தி நாயகனின் முன்னாள் காதலியின் மனதில் புகுந்து அவளைத் தன்வசப்படுத்துவதே. வில்லி இப்படி செய்வதால் நாயகன் நியூயார்க் நகரைக் காப்பாற்றுவானா? காதலியைக் காப்பாற்றுவானா? வில்லி அடைய நினைக்கும் வி மேக்ஸ் என்னும் பவரை அடையத் தடையாய் இருப்பானா? என்று தான் வில்லி யோசிக்கிறாள்.

நாயகன் தன் காதலிக்கு ஒரு புதிய காதலன் இருக்கிறான் என்ற விஷயமும் தெரிய வர அப்செட் ஆகிறான். ஆக்ரோஷம் கொள்கிறான்.

இப்போது நாயகனுக்கு மூன்று கடமைகள்:

1. காதலிக்கும் நண்பர்களுக்கும் தான் யார் என்ற நினைவை அவர்கள் மூளைக்குக் கொண்டு வர வேண்டும்

2. வில்லியின் முயற்சிக்குத்தடையாக இருக்க வேண்டும்

3. நியூயார்க் நகரைக்காப்பாற்ற வேண்டும்.

இந்த மூன்றையும் நாயகன் எப்படி செய்தான் என்பதே மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக பீட்டர் பார்க்கர் + ஸ்பைடர் மேன் ரோலில் டாம் ஹாலண்ட் அசத்தி இருக்கிறார். ஆக்சன் அதகளத்தோடு செண்ட்டிமெண்ட் செம்மலாகவும் பெண்கள் மனதைக் கவர்கிறார். காதலிக்குத் தன்னை நினைவுபடுத்த படாத பாடு படுவது உருக்கம்.

வில்லியாக சாடி சிங்க் மிரட்டி இருக்கிறார்.

நாயகியாக ஜெண்டாயா அழகுப் பதுமையாய் வருகிறார். நல்ல நடிப்பு.

மற்ற அனைவரது நடிப்பும் கச்சிதம்.

கிரிஸ் மெக்கென்னா + எரிக் சோமர்ஸ் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத, டெஸ்டின் டேனியல் க்ரேட்டன் இயக்கி இருக்கிறார்.

படத்தின் ரன்னிங் டைம். 145 நிமிடங்கள்.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
ஸ்பைடர்மேன் 4

சபாஷ் டைரக்டர்

1. படத்தில் மொத்தம் இருக்கும் 5 ஆக்சன் சீக்வன்சுமே அதகளம் தான் என்றாலும், ஓப்பனிங்க் ஆக்சன் சீக்வன்ஸ், ஹல்க் உடனான ஆக்சன் சீக்வன்ஸ், க்ளைமாக்சில் சைனீஷ் உடனான ஆக்சன் சீக்வன்ஸ் (நிஞ்சா பைட்) இந்த மூன்றும் கலக்கல் ரகம்.

2. நியூயார்க் நகரத்தைக் கலர்புல்லாகக் காட்டிய விதம், ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.

3. சூப்பர் ஹீரோ படங்களில் எமோஷனல் சீன்ஸ் அதிகம் இருக்காது. இந்தப்படம் விதிவிலக்கு. டி வி சீரியலுக்கு இணையான ஓவர் செண்ட்டிமெண்ட் சீன்ஸ் பெண்களுக்குப் பிடிக்கலாம்.

4. தன்னை அடையாளம் தெரியாத காதலியை நாயகன் முத்தம் தர முயலுன்போது காதலிக்குப் பழைய நினைவுகள் வர தியேட்டரில் ஆர்ப்பரிக்கும் கரகோஷத்துக்கு இடையே வெளிப்படும் ட்விஸ்ட் அருமை.

5. ஒளிப்பதிவு, பின்னணி இசை, சி ஜி ஒர்க் அனைத்தும் பிரம்மாண்டம்.

6. நாயகி வேறு ஒருவனுடன் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்க்கும் நாயகன் உடைந்து கலங்குவது அருமை.

7. தன்னை யாரும் நோக்கு வர்மம் மூலம் வசப்படுத்தாமல் இருக்க ஒரு சிப்பைக் கண்டுபிடித்து தன் பின்னங்கழுத்தில் பொருத்திக்கொள்ளும் சீன்.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
ஸ்பைடர்மேன் 4

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. வில்லியின் கேரக்டர் டிசைன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் வில்லன் கேரக்டர் பாணியில் இருக்கிறது. நோக்கு வர்மம், ஹிப்னாடிஸம் இந்த கான்செப்ட் எல்லாம் நாம் ஏற்கனவே பார்த்தாச்சு.

2. ஒரு பக்கம் காதலி, இன்னொரு பக்கம் குழந்தைகள் இருவரையும் ஒரே நேரத்தில் காப்பாற்ற வேண்டும். இந்த சீன் ஏற்கனவே பழைய ஸ்பைடர்மேன் கதையில் பார்த்தது தான். புதுசா யோசிங்கப்பா... அட்லி மாதிரி இருந்தா எப்படி?

3. படத்தில் 60% போர்சன் லொட லொட என பேசிக்கொண்டே இருக்கிறார்கள். போர் அடிக்கிறது. டெக்னிக்கல் டெர்ம்ஸ் சாமானிய மக்களுக்குப் புரியாது. சும்மா பேச்சு மட்டும் தான் வீச்சு இல்லையா? எனக் கேட்கத் தோன்றுகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

கல்கி கமெண்ட் - ஸ்பைடர்மேன் ரசிகர்கள் , சிறுவர்கள், பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ரேட்டிங் 3/5

இந்த சினிமா விமர்சனத்தைப் படிப்பதன் மூலம் படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் பிளஸ், மைனஸ்கள் மற்றும் லாஜிக் குறைகளைத் தெளிவாக அறிந்து கொண்டு உங்கள் பணத்தையும் நேரத்தையும் புத்திசாலித்தனமாகச் சேமிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com