ஹிட்டடித்த அரண்மனை 4... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aranmanai 4
Aranmanai 4

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி ரிலீசான, அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே ரீ-ரிலீஸ், மற்ற மொழிப் படங்கள் மட்டுமே ஹிட் அடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு, VTV கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களை விடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிவரும் அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது இயக்குநர் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சுந்தர்.சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாகவே பழைய சுந்தர்.சி எங்கே சென்றார், அன்பே சிவம் போன்ற படங்கள் ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இயக்குநராக இருந்த சுந்தர்.சி நடிப்பின் பக்கமும் சென்றார். அந்த வகையில் அவர் நடித்த ‘தலைநகரம்’ உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில காலம் கழித்து ‘கலகலப்பு’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார் சுந்தர்.சி. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

இதையும் படியுங்கள்:
விரைவில் சூது கவ்வும் 2... அடுத்தடுத்து வெளியாகும் பாடல்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Aranmanai 4

தொடர்ந்து அவர் கையிலெடுத்த படம்தான் அரண்மனை. முதல் பாகம் நல்ல வெற்றி பெற, அடுத்தடுத்து 2, 3 பாகங்களை எடுத்தார். ஆனால், அவை அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் 4ம் பாகத்தையும் உறுதியுடன் எடுத்தார். இந்தப் படம்தான் கடந்த 3ம் தேதி ரிலீசானது. முதல் நாளிலேயே 4.65 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அரண்மனை 4 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம், அப்படத்தை வருகிற ஜூன் 21ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடியிலும் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com