

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கள் தற்போது அதிக கவனத்தை பெற்று வருகின்றன. அதே நேரம் தற்போது ஜெயிலர்- 2 திரைப்படம், 700 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சி கூடிய கருத்துக்கள் ஜெயிலர்- 2 திரைப்படத்தின் வசூலை முன்வைத்து கூறப்பட்டுள்ளதா? என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித் தா , அருணாச்சலம் , மேட்டுக்குடி , கிரி, அரண்மனை , கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். சுந்தர். சி பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படங்கள் அதிகம் இயக்குவது இல்லை. சுந்தர். சி தனக்கென்று ஒரு தனி பாணியை பின்பற்றி வருகிறார் , இவரது திரைப்படங்களும் பார்த்தவுடனேயே இவருடையதுதான் என எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
மிகவும் எளிமையான திரைக்கதை , அதில் பெரிதாக சென்டிமென்ட் எதுவும் இருக்காது. சுந்தர்.சி படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் , இரண்டாவது பாதி லேசாக தொய்வுடன் செல்லும் , இறுதிக் காட்சிகளில் திரைப்படம் மீண்டும் சூடு பிடித்து அனைவரும் எதிர்பார்க்கும் முடிவுடன் திரைக்கதை முடியும். இவரது பெரும்பாலான படங்களில் ஏதேனும் ஒரு திருமணம் நடைபெறும் , அந்த திருமணத்தில் நடைபெறும் காமெடி கலாட்டாக்களை வைத்து பாதி திரைப்படத்தை நகர்த்தி விடுவார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன் - 2 'திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. அதே நேரம் இரண்டாம் பாகம் சுந்தர்.சி இயக்குவதால் , படத்தில் நகைச்சுவை காட்சிகள் ஏராளமாக இருக்கும் ரசிகர்களை மேலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சுந்தர்.சி ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். "நான் ஒரு லிட்டர் பாத்திரத்தில் 10 லிட்டர் பாலை ஊற்றி விட்டேன் என்று கூறினால் , அது எவ்வாறு சாத்தியப்படும்? அது போல தான் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் வரம்பு ஒன்று உள்ளது. ஒரு திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது, 1000 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது, என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை மற்றும் பொய்யாகும்.
தியேட்டருகே வராமல் பிளாப்பான திரைப்படங்களை கூட, வசூலில் சாதனை படைத்ததாக போலி செய்திகளையும் போஸ்டர்களையும் தயாரிப்பாளர்கள் பரப்பி மக்களை நம்ப வைக்கிறார்கள்," என்று சுந்தர்சி கூறியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் -2 திரைப்படம் ₹500 கோடி வசூலை தாண்டி ₹700 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி யின் கருத்துக்கள் ஒருவேளை ரஜினியின் திரைப்படத்தை மனதில் வைத்து கூறப்பட்டிருக்குமா? என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியிருந்தார். ஒருவேளை அதன் காரணமாக சுந்தர்.சி தற்போது இதுபோன்று கருத்துக்களை கூறி இருக்கிறாரா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ஆனால், இதற்கும் முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பும் சுந்தர்.சி இதே போன்று ₹500 கோடி பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் சும்மா கதை தான், என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது