ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சூர்யா..! – தீபாவளி பண்டிகையை தெறிக்கவிட தயாராகும் 'சீன்' திரைப்படம்!

காய்ச்சலால் விளம்பர நிகழ்வை தவிர்த்த சூர்யா; காலை 6 மணி காட்சி அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
surya
surya
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி ரேசில் 'சீன்' திரைப்படம் முன்னிலையில் உள்ளதால், அந்த படத்தை மேலும் பிரபலமாக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக சூர்யா செயல்பட்டு வருகிறார். இதற்காக தொடர்ச்சியாக விளம்பர நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் குழுவினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அதிக எதிர்பார்ப்பு மிக்க திரைப்படமான 'சீன்', நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா தனது வழக்கமான பாணியில் நடிக்காமல் , ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளார்.

காக்க காக்க மற்றும் சிங்கம் திரைப்பட பாகங்களில் நேர்மையான அதிகாரியாகவும் , தனது வேலையை மதிக்கும் காவல் துறை அதிகாரியாக சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் , சீன் திரைப்படத்தில் சூர்யா தன் வேலையை தூக்கி எறியும் டிஎஸ்பியாக நடித்துள்ளார். சூர்யா தனது வழக்கமான முறுக்கு மீசையும் , பல்லைக் கடித்து வசனம் பேசும் காட்சிகளும் இதில் இல்லை.

வித்தியாசமான வேடத்தில் சூர்யா நடிப்பதாலும் , மலையாளத் திரையுலகின் கவனத்தை அதிகம் ஈர்த்த , ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நஸ்லீன் இந்த திரைப்படத்தின் வில்லன் என்பது தான் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சீன் திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு கேரள மாநிலம் கொச்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று சூர்யாவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைபாட்டினால் , அவர் நேரில் கலந்து கொள்ள முடியாது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருக்கு திடீரென ஏற்பட்ட தீவிரக் காய்ச்சல் காரணமாகவே அவர் கொச்சி பயணத்தைத் தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு, சூர்யாவை நேரில் காண வேண்டும் என்ற ஆவலுடன் பல இடங்களிலிருந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து கொச்சியை நோக்கி வந்து கொண்டிருந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

"எங்கள் அன்புக்குரிய சூர்யாவை நேரில் கண்டு வாழ்த்துவதற்காகவே மிகவும் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டிருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே" எனப் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவலையுடன் தங்களது வருத்தத்தைப் பதிவிட்டு வருகின்றனர். சூர்யா விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளனர்.

scene film
scene surya2D Entertainment

இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி காரணமாக சீன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கே திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனாால், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புக் மை ஷோ உள்ளிட்ட , பிரபலமான முன்னணி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆப்கள் மற்றும் இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களில் சீன் மட்டுமே , முன்னணி கதாநாயகன் மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்ட இயக்குனரால் , இயக்கப்பட்டதால் அதற்கான மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அதிவேகமாக பல திரையரங்குகளில் விற்றுத் தீர்ந்துள்ளன. சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் இந்த அளவிற்கு திரைப்பயணத்திலேயே இந்த அளவிற்கு மிக வேகமான முறையில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாட வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.