சூர்யா அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்... இதுதான் புது கெட்டப்பா? வைரலாகும் வீடியோ!

Surya
Surya

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவில் இந்த வாரம் தொடங்குவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் தற்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் பிரபல நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. இதுவரை தமிழ் திரையுலகில் எடுக்கப்படாத ஒரு கதைக்களத்தை இந்தமுறை கையாண்டுள்ளார் சிவா என்று கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படமும் இது தான்.

விரைவில் அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரும் முதல் முறையாக இணையும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட வீடியோ கார்த்திக் சுப்புராஜின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் முதல் ஷாட் எடுக்கப்பட்ட காட்சி மற்றும் சூர்யாவின் அட்டகாசமான கெட்டப், அந்தமான் கடல் முன் சூர்யா சூட்கேஸ் மற்றும் பேக் உடன் உட்கார்ந்திருக்கும் ஸ்டைல் ஆகிவற்றை பார்க்கும் போது இந்த படம் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான சூர்யா படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கம் படத்தில் வைத்திருந்த மீசையை விட வித்தியாசமான மீசை தோற்றத்தில் காணப்படும் சூர்யாவின் கெட்டப்பை பார்க்கும் போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி!
Surya

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

முற்றிலும் மாறுபட்ட ஒரு கெட்டப்பில் சூர்யா ஒரு பெட்டியுடன் கடலை பார்த்து அமர்ந்தபடி உள்ள முதல் காட்சி இப்பொது படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com