தனி விமானம் வாங்கிய சூர்யா… விலை எவ்வளவு தெரியுமா?

Surya
Surya
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இந்திய திரை பிரபலங்கள் தனக்கென தனி விமானம் வாங்கி வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்தவகையில் இப்போது நடிகர் சூர்யாவும் தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் சூர்யா. சூர்யாவின் படம் சமீபக்காலமாக அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால், இனி அடுக்கடுக்காக அவரது படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் உள்ளன.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். மேலும் வாடிவாசல், புறநானூறு போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன. இதற்கிடையே சூர்யா இப்போது முக்கால்வாசி தனது மனைவியுடன் மும்பையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே சென்னை வந்து செல்கிறாராம்.

இப்படியான சூழ்நிலையில் சூர்யா ஒரு தனி விமானம் வாங்கியிருக்கிறாராம். டசால்ட் ஃபால்கன் 2000 (Dassault falcon 2000) என்ற சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த விமானம் ரூ.120 கோடி எனக் கூறப்படுகிறது. அதில், நவீன தொழில்நுட்ப வசதிகள், ஆடம்பர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. இதனால், தமிழகத்தில் அதிக விலையில் தனி விமானம் வைத்திருக்கும் நடிகராக சூர்யா விளங்குவார் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படியுங்கள்:
உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?
Surya

பாலிவுட் நடிகர்கள் பலர் தனி விமானம் வைத்திருப்பது தெரியும். ஷாருக்கான் கூட சமீபத்தில் ஒரு விமானம் வாங்கியதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தென்னிந்தியாவை பொறுத்தவரை சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களுக்கென சொந்த விமானம் வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் நயன்தாரா கூட விமானம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இப்போது இந்த லிஸ்டில் சூர்யாவும் இணைந்திருக்கிறார்.

மும்பைக்கும் சென்னைக்கும் அழைய நேரமில்லை போல… அதான்…

logo
Kalki Online
kalkionline.com