மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா? இயக்குனர் யார் தெரியுமா?

Surya and Jyothika
Surya and Jyothika

திரை முதல் நிஜ வாழ்க்கை வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஜோடி, சூர்யா ஜோதிகா ஜோடி. அவர்கள் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்று செய்திகள் வெளிவாகியுள்ளன. இதனால், தமிழக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறவுள்ளது.

இந்திய சினிமாவிலேயே சூர்யா ஜோதிகாவின் காதல் கதை என்பது மிகவும் பேசப்படும் ஒரு கதையாகும். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ முதல் ‘சில்லுன்னு ஒரு காதல்’ வரை இந்த ஜோடிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காக்க காக்க படத்திலிருந்தே இருவரும் காதலித்து வருவதாக சூர்யா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 2006ம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் திருமணம் செய்துக்கொண்டனர்.

அதன்பின்னர் வெகுநாட்களாக நடிப்பில் களமிறங்காத ஜோதிகா, பின்னர் மகளிர் சம்பதப்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதேபோல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான காதல் தி கோர் படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்தார். அப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்த ஜோதிகாவிற்கு பாராட்டுகள் குவிந்தன.

அதேபோல் ஜோதிகா பாலிவுட்டில் சைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. என்னதான் ஜோதிகா, சூர்யா வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும், இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற கேள்விகள் முன்னிலை வகித்தன. ஜோதிகாவின் அடுத்தப் படங்கள் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சூர்யாவின் கங்குவா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்கள்:
Introducing Aswathama: இணையத்தைக் கலக்கும் கல்கி 2898 AD படத்தின் அப்டேட்!
Surya and Jyothika

இதனையடுத்து, சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தப் படத்திற்கான கதை உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்கவுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. இவர் Banglore Days, கூடே, உஸ்டாட் ஹோட்டல் போன்ற ஹிட் படங்களை எடுத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இது சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் முதல் படமாகும். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com