சூர்யாவின் 'சீன்' டிரெய்லர் ரிலீஸ்: கெரியரின் உச்சத்தில் DSP பதவியை ராஜினாமா செய்யும் இன்பராஜ்!

சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் டிரெய்லர் விஜய்யின் ஸ்டைலை நினைவுபடுத்துகிறது. என்னவாக இருக்கும்?
scene trailer
scene trailer 2D Entertainment
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவிற்கு மீண்டும் சுக்கிர தசை ஆரம்பித்துள்ளது. கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள அவர் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் அவரது நடிப்பில் உருவான 'சீன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. சமீப காலமாக சூர்யா தனது நடிப்பு பாணியையும் , கதாபாத்திர உருவாக்கத்தையும் மாற்றியுள்ளார். முன்பெல்லாம் சூர்யா ரொம்ப நல்ல பிள்ளை என்பதைப் போன்று தோன்றும் கதாபாத்திரத்தையும் , நுனி நாக்கில் தமிழ் பேசும் முறையையும் சிறிது மாற்றியுள்ளார்.

டிரைலரில் "அலெக்ஸா பிளே சம் மியூசிக்" என்று சூர்யா பேசுவதுடன் தொடங்குகிறது. வாட் மூட்? என்று அலெக்ஸா கேட்க எனி மூட்றி" என்று சூர்யா சொல்கிறார். கிட்ட தட்ட மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் படுத்திருக்கும் ஸஸ்டைலான போஸை நினைவுப் படுத்துகிறார். டிரைலரில் பல காட்சிகள் நடிகர் விஜய்யை நினைவுப் படுத்துகிறது. டிஎஸ்பி இன்பராஜாக நடிக்கும் சூர்யா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அவர் ஏன் ரிசைன் செய்தார்? என்று காவல்துறையினர் பேசிக் கொள்கின்றனர். சூர்யாவோ ஏதோ ஒரு ஆங்கில பாடலுக்கு இடுப்பை சுழற்றி நடனம் ஆடுகிறார்.

அடுத்த காட்சியில் யூடியூப் பிரபலம் ராஜ்பிரியன் , படுத்திருக்கும் சூர்யாவிடம் , " உங்களை ஸ்டீபன் சார் அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வர சொல்லி இருக்கார் சார் , தயவு செய்து கோ ஆபரேட் பண்ணுங்க என்று கெஞ்சுகிறார். கோ ஆபரேட் எல்லாம் பண்ண முடியாதுன்னு போய் சொல்லு" என்று சூர்யா சொல்கிறார். வர முடியலைன்னு சொன்னா , போய் தூக்கிட்டு வர வேண்டியது தானே என்று லால்(ஸ்டீபன் ) சொல்கிறார்..இதற்கு இடையில் , நீங்க தான் வேலையில் இல்லையே என்ன வேணாலும் பேசலாம் சார், என்று ஒருவர் போனில் குறுக்கிடுகிறார்.

இன்பராஜை வர சொல்லுடா என்று லால் கோபமாக கட்டுகிறார். 'உங்களை தூக்கிட்டு வர சொன்னார் சார்,'என்று ராஜ்பிரியன் சொல்ல, சூர்யா தூக்க சம்மததம் தெருவிக்க, சிகரெட்டுடன் அவரை தூக்கி வருகின்றனர்.

"இப்ப உன் கெரியரின் உச்சத்தில் இருக்க , வேலையை விட்டுட்டு பன்ன போற , என்று லால் கேட்க? பாலிடிக்ஸ் சேரப் போறேன்!" என சூர்யா கூறுகிறார்.மேலாதிகாரியான லால் மீதே சிகரெட்டை துப்பி விட்டு சூர்யா கிளம்புகிறார். சூர்யா வீட்டு பணிப்பெண்ணாக மாயா என்ற பெயரில் நஸ்ரியா பகத் அறிமுகமாகிறார்.

scene film
scene surya2D Entertainment

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் சைக்கோ கில்லரை தேடுகின்றனர் , அப்போது தூக்கில் தொங்கிய ஒருவரை ரசித்து விட்டு வாயில் லாலிப் பாப்புடன் நஸ்ரின் அறிமுகமாகிறார்.மலையாள உலகின் சாக்லெட் பாய் தான் சைக்கோ கில்லரா? அடுத்தடுத்த காட்சிகளில் நஸ்ரியா ஆக்ஷனில் இறங்கி கண்ணில் படுபவர்களை தூக்கி போட்டு மிதிக்கிறார். ஒரு வேளை விக்ரம் திரைப்படத்தில் வரும் ஏஜென்ட் டீனா போல , இவரும் ரகசிய உளவாளியோ?

படத்தில் ஆனந்தராஜிற்கு நகைச்சுவை கதாபாத்திரம் போல , அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை..தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று சீன் தென்னிந்திய திரையங்குகளில் வெளியாகிறது. இந்த முறை தீபாவளிக்கு ரஜினி ,கமல் , விஜய் ,அஜித் , விக்ரம் , தனுஷ் என்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகாததால் சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.