தளபதியுடன் இணையும் கெளதம் வாசுதேவ் மேனன்!

vijay
vijay
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த கெளதம் மேனன்தான் தளபதி 67 படத்தில் இணைந்துள்ள அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தி உள்ளார்.

தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்துள்ளதாக அவரே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட பிரபலங்கள் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ரகசியமாக தளபதி 67 படத்துக்கான பூஜை போட்டு ப்ரமோ வீடியோ மற்றும் ஷூட்டிங்கே பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் கமிட் ஆகி வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்ஃபாசில் மற்றும் சூர்யா என பிரபல நட்சத்திர பட்டாளத்தை நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

gowtham vasudev menon
gowtham vasudev menon

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், சாண்டி என ஏற்கனவே வில்லன்கள் பட்டியல் நீண்டு கொண்டு போகும் நிலையில், தற்போது கூடுதல் இணைப்பாக கெளதம் மேனனும் இணைந்துள்ளார். மேலும், ஹீரோயின்களாக த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்தும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது கமல்ஹாசன் அல்லது சூர்யா கேமியோவாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com