Tamil cinema
தமிழ் சினிமா

குத்தாட்டமும் வன்முறையும் மட்டுமேவா? - ஒரு ரசிகனின் கேள்வி!

Published on

நான் சினிமா ரசனை என்ற குட்டி கட்டுரையில் இன்றைய சினிமா பற்றி கூறும் போது

“நோ கமெண்ட்ஸ்“ என்று எழுதினேன். இது ஒரு விதமான ‘எஸ்கேபிசம்’ என்று மறு சிந்தனையில் தோன்றியது. எனவே இன்றைய சினிமா பற்றி எழுதியே தீர வேண்டும் என்று நினைத்தேன். விளைவு... இந்த குட்டி கட்டுரை.

இன்றைய தமிழ் சினிமாவில் சில விதிவிலக்கு படைப்புகளும் இருக்கத் தான் செய்கிறது.

ஆனால் பொதுவாக...

3 குத்தாட்டம்

4 சண்டை

என்று தான் அதன் ஃபார்மூலா உள்ளது. யதார்த்த கதாபாத்திரங்களில் காதலையும், வன்முறையும் சேர்த்து விடுகிறார்கள்.

முழுக்க முழுக்க தனிமனித துதி பாடுவதே இன்றைய சினிமா.

நாயகன் அடிக்கும் ஒரே அடியில் 6 அடி தள்ளி முடியாமல் விழுவது. இப்படி எத்தனை பேர் வந்தாலும் தனி ஆளாக துவம்சம் செய்து விடுகிறான்.

இப்போது புதிய யுக்தி ஒன்று உள்ளது. நாயகன் பெரிய தூப்பாக்கியால் எதிரியின் வாகனங்களை சுக்கு நூறாக செய்து தீ பிடிக்க வைக்கிறான்.

இதற்கு விஜய், அஜீத், ரஜினி, கமல் ஹாஸன் படங்கள் விதி விலக்கு அல்ல. தனி நபர் துதி பாடுவது தான் இன்றைய சினிமா. குத்தாட்டமும், பயங்கர சண்டை காட்சிகள் தான் படத்தின் முதுகெலும்பு.

இன்றைய சினிமா

  • காதல்

  • குத்தாட்டம்

  • வெறி பிடித்த சண்டை

என்று முடங்கி விட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர்.. தண்ணீர்..!, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும், உதிரி பூக்கள், நெஞ்சத்தை கொள்ளாதே, சிந்து பைரவி, வேதம் புதிது…

இப்படி சொல்லி கொண்டே போகலாம். இந்த படங்களில் குத்தாட்டம் மற்றும் வன்முறை இல்லவே இல்லை. ஆனால் இவை பெற்ற வெற்றிகள் அசத்தல்.

7வது மனிதன் (ரகுவரன் நடித்த முதல் படம்) மிகச் சிறந்த படம். எல்லா பாடல்களும் பாரதியார் பாடல்கள். புதிய இசை. அந்த படம் இப்போது வந்திருக்க வேண்டும். காலம் முந்தி வந்ததால் அப்படம் தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மதராஸி - துப்பாக்கிக் கலாச்சாரம் தவிர்க்க துப்பாக்கியால் போராடும் படம்!
Tamil cinema

சமீபத்தில் வந்த ரஜினி படத்தில் தேவையே இல்லாத குத்தாட்டம். அதுவும் தமன்னா ஆடுவார். நடனம் நடனமாக இல்லை. செக்சியாகவே இருந்தது.

நான் பாடலுக்கு, நடனத்திற்கோ எதிரானவன் அல்ல. ஆனால் கதைக்கு கொஞ்சமாவது தொடர்பு இருக்க வேண்டும்.

குத்தாட்டம் தனி டிரேக்...

வன்முறை தனி டிரேக்...

காதல் தனி டிரேக்...

இது தான் இன்றைய சினிமா.

எல்லா படங்களும் இந்த யுக்திகளை தான் தூக்கி பிடிக்கின்றனர்.

சினிமா என்பது மக்களுக்காக.

இதை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா நட்சத்திரங்கள் இதை உணர வேண்டும். மக்கள் விரோத கதை, குத்தாட்டம், பயங்கர வன்முறை, எந்த வடிவிலும் செக்ஸ் நுழையக் கூடாது.

இதையும் படியுங்கள்:
எஸ்.கே-யின் 'மதராஸி' திரைப்படத்துடன் களத்தில் இறங்கும் படங்களின் லிஸ்ட்..!
Tamil cinema

பிரபலமான பழைய இயக்குனர்கள் பலர் பல்வேறு வித்தியாசமான படங்களை எடுத்து உள்ளார்கள்.

பீம்சிங், எ.பி.நாகராஜன், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதி ராஜா, ருத்ரையா, என்று பட்டியல் தொடரும்.

எனவே முடித்து கொள்கிறேன்.

சினிமா நசிந்து வரும் இன்றைய சூழலில் நல்ல படங்களை எடுத்து இயக்குனர்கள் வெளியிட வேண்டும்.

சினிமா ரசிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.

சினிமா விழித்துக் கொள்..!

logo
Kalki Online
kalkionline.com