Tamil Rockers டீம் கைது… காவல்துறை அதிரடி!

Tamilrockers
Tamilrockers
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

புதுப்படங்கள் அனைத்தும் உடனடியாக கிடைக்கும் தளம் தமிழ் ராக்கர்ஸ். இதனால், தியேட்டர் செல்லாமல், உடனுக்குடன் போனிலேயே புதுப்படங்களைப் பார்க்கலாம். இதனால், புதுப்படங்கள் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தன. அந்தவகையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் டீமை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஒரு படத்தை உருவாக்க எத்தனை பேரின் கடின உழைப்பு, தியாகம் போன்றவை இருக்கும்? படப்பிடிப்பு தளங்களில் இதுவரை எத்தனை முறை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகள் கூட ஏற்பட்டிருக்கின்றன? ஒரு படத்திற்காக இதெல்லாம் செய்வது அவசியம்தானா? இதெல்லாம் வீண் என்று கூறிக்கொண்டு பலர் வருவார்கள். ஆனால், நினைத்துப்பாருங்களேன், ஒரு படம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது.

ஒரு படம் ஒரு தனி மனிதனின் நடத்தையில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது, சில படங்கள் வாழ்க்கையை கற்று தந்துள்ளது, சில படங்கள் அறியாமையை விலக்கியிருக்கிறது, கெட்டவனை நல்லவனாக்கியிருக்கிறது, துயரத்தில் இருப்பவனை சிரிக்க வைத்திருக்கிறது. இப்படி இத்தனை விஷயங்களை உள்ளடக்கிய படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு எத்தனை பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளை சரிவர செய்ய எத்தனை நாள் தூங்காமல் கதையை உருவாக்கியிருப்பார்கள். அந்த கதையை திரைக்கதையாய் மாற்ற எத்தனை பேர் எவ்வளவு உழைத்திருப்பார்கள். இந்த உழைப்பை காண ஆசைக்கொள்பவர்கள் 150 ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்ப்பதுதானே நியாயம்?

ஆனால், அதற்கு நேரமாறாக சில சட்டவிரோதமான முறையில் திருட்டுத்தனமாக புது படங்களை பதிவிட்டு, எத்தனை பேரின் உழைப்புகளை அவமானப்படுத்துகிறார்கள். படக்குழு வசூல் ரீதியாக எவ்வளவு சரிவை சந்திக்க நேரிடும்.

அந்தவகையில் சட்டவிரோத பைரசி குழு திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உக்ரைனுக்கு 160 கோடி டாலர் கொடுத்த ஐரோப்பா! அது யார் பணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...
Tamilrockers

அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வெளிவந்த நிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தனது மொபைல் போனை வைத்து அந்தப் படம் முழுவதையும் ரெகார்ட் செய்த தமிழ் ராக்கர்ஸ் டீமை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் டீம் டெலிகிராம் பக்கத்தையும் நடத்தி வருகிறது. அந்த பக்கத்திலும் புது படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. மேலும், ஜெப் ஸ்டீபன் ராஜை சைபர் க்ரைம் போலீசார் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com