வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், 'தளபதி' விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படமாக உருவாகிவரும் 'லியோ' படத்தில் நடித்துவரும் நிலையில், 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், 'தளபதி 68' குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகிவருகிறது.

நடிகர் விஜய், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் 100 வது தயாரிப்பில் விஜய் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் 'தளபதி 68' படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது தள்ளிப் போயுள்ளது. முன்னதாக, கார்த்திக் சுப்புராஜ் விஜய்யின் 68வது படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவலின்படி, அந்த திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. பின்னர் தெலுங்கு டைரக்டர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் 'தளபதி 68'ல் விஜய் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது, புதிய திருப்பமாக வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து 'தளபதி 68' படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை சந்தித்து, தனது கதை குறித்த ஒன்லைன் ஸ்டோரியை கூறியதாகவும், அதைக் கேட்டதும் விஜய்க்கு பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அதற்கான முழு ஸ்கிரிப்டை உருவாக்குமாறு விஜய் தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

ஏற்கெனவே அஜித் நடிப்பில் 'மங்காத்தா', சிம்பு நடிப்பில் 'மாநாடு' என வித்தியசானமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து வெற்றியைக் கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்யுடன் கைகோர்க்கும் நிலையில், இந்தக் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

கிட்டத்தட்ட உறுதியான விஷயமாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெங்கட் பிரபுவுடன் விஜய் முதன்முதலாக இணைய இருப்பதால், இத்தகவலானது, விஜய் ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com