நேற்று இரவு கனவில் விஜயை சந்தித்ததாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பதிவிட்டிருக்கிறார்.
கனவுகள் அனைவருக்கும் வருவதுதான். குறிப்பிட்ட நபர் கனவில் வரும்போது அவர்களை பற்றி ஆழ்மனதில் நினைத்திருப்பார்கள், அதனால்தான் கனவில் வருவார்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் நடிகர் பார்த்திபன் கனவில் விஜய் வந்திருக்கிறார் போல.
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து ஓராண்டு நிறைவுபெற்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் முழுவதுமாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இருக்கப் போகிறார். அடுத்த ஆண்டு தேர்தலிலும் களமிறங்கப்போகிறார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இவரின் கட்சியில் சினிமா நட்சத்திரங்களும் இணைய ஆசைப்படுகிறார்கள். இப்படி கட்சியை வலுபடுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
இப்படியான நேரத்தில் விஜய் குறித்த கனவைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.
அதாவது, “நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்...அது கனவு!” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், “ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்… இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.” என்று பதிவிட்டார்.
இந்த பதிவின்மூலம் அவர் விஜயை பற்றி, அவர் குறித்தான பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி தனக்குள்ளேயே ஆலோசிக்கிறாரே… ஒருவேளை இருக்குமோ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருக்கிறது என்ற பட்சத்தில் இதுபோன்ற முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் கட்சியில் இணைந்தாலும், ஆச்சர்யத்திற்கில்லைத்தான். என்னவாக இருந்தாலும், நாம் காத்திருப்பது அவசியம்… எப்போது வேண்டுமென்றாலும் எந்த அறிவிப்பு வேண்டுமென்றாலும் வரலாம்.