

விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. தமிழ்திரை உலகில் இருந்து எம்ஜிஆர்க்கு பின்னர் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்தவர் விஜய். தமிழ் சினிமாவில் அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. விஜயின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னால் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அந்த ரசிகர்கள் அவரை சினிமா உலகையும் தாண்டி , அரசியலிலும் வெற்றி பெற பின்னணியாக இருந்துள்ளனர்.
அரசியலுக்கு நுழைந்த பின்னர் விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. விஜயின் ரசிகர்கள் அந்த திரைப்படத்தின் வெளியீட்டை மிகப் பெரிய திருவிழா போல கொண்டாட எண்ணி காத்திருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது.
பராசக்தி திரைப்படத்துடன் வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் இன்று வரையில் வெளியாகவில்லை. விஜய் அரசியல்வாதியாக இருக்கும் பொழுது திரையிடப்பட வேண்டிய அந்த திரைப்படம் அவர் முதல்வராகி பல நாட்களைக் கடந்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
ஜன நாயகன்' திரைப்படத்தில் , அரசியல்ரீதியிலான விமர்சனங்கள் ஏராளமாக இருந்ததால் , தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் கடும் நெருக்கடி நிலவியது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவற்றை நீக்க கூறிய நிலையில், தயாரிப்பு நிறுவனம் அதற்கு உடன்படாமல் நீதிமன்றம் சென்றது. தற்போது சிக்கல்களை எல்லாம் கடந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் , நீண்ட காலமாக தடைப்பட்டு கிடந்த ஜனநாயக திரைப்படம் விரைவில் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதற்கான முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். படத்தின் அனைத்துப் பணிகளும் தங்குதடையின்றி முடிந்தால், இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 'ஜன நாயகன்' திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இறுதியாகத் திரையில் தோன்றும் படம் என்பதால், இது ரசிகர்களுக்கு வெறும் படமாகத் இல்லாமல் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக இருக்கும். படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் பரவியுள்ளன.
விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் இந்த திரைப்படம் இதுவரை கண்டிராத பரிணாமமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மாமிதா பைஜு மற்றும் நரேன் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் சிறப்பான முறையில் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவும், பெரிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிகாரப்பூர்வமான அந்த அறிவிப்புக்காக, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த தமிழ் நாட்டு மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகன் திரைப்படம் எப்படியும் விஜயின் முந்தைய வசூல் சாதனைகளை மிஞ்ச வேண்டும் என்று ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றனர்.