

“என் நெஞ்சில் குடியிருக்கும்..!” என்ற வார்த்தைக்கு சொந்தக்காரராக என்றும் இருப்பவர்தான் நம் தளபதி விஜய் அவர்கள்!
சினிமா துறையில் அப்பா ஓர் இயக்குனர் என்றாலும் கூட; பல கஷ்டங்கள்,அவமானங்கள், கேலி, கிண்டல்கள் என்று பல போராட்டங்களை கடந்து இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத தூணாக இருந்து வருகிறார்.
1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவரின் பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அதிலும் குறிப்பாக படத்தில் வரும் விஜய் பாடிய பாடல்கள் மற்றும் இதர பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து பட்டையை கிளப்பி வந்தது.
முதல் முதலில் விஜய் அவர்கள் பாடிய பாடல் 1994ல் வெளியான விஜய் நடித்த “ரசிகன்” திரைப்படத்தில் உள்ள “பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி” என்ற பாடல்தான். இந்த பாடலுக்கு ஏற்ப தேவாவின் இசையும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
அதனைத் தொடர்ந்து 1995-இல் தேவா படத்தில் வந்த, “அய்யய்யோ அலமேலு”, “கோட்டகிரி குப்பம்மா” போன்ற பாடல்களும். விஷ்ணு படத்தில் வந்த, எல்லோருக்கும் பிடித்த வைப் மெட்டீரியல் ஆன "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா” என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதேபோல் கோயம்புத்தூர் மாப்பிள்ளையில், “பாம்பே பார்ட்டி ஷில்பா ஷெட்டி”, மாண்புமிகு மாணவனில், “திருப்பதி போன மொட்டை”, செல்வாவில், “சிக்கன் கறி” காலமெல்லாம் காத்திருப்பேனில், “அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி”, காதலுக்கு மரியாதையில், “ஓ பேபி.. ஓ பேபி..”, பெரியண்ணாவில், “நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து”, “ஜுத்தாடி லைலா”போன்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
1999இல் நெஞ்சினிலே திரைப்படத்தில், “தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா”
அதற்குப் பிறகு 2000க்கு பின், பிரியமானவளேவில், “மிசிசிப்பி நதி குலுங்க”, பத்ரியில், “என்னோட லைலா”, தமிழனில், “உள்ளத்தைக் கிள்ளாதே”, சச்சினில், “வாடி வாடி கைப்படாத சீடி”,
துப்பாக்கியில், “கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன்”, தலைவாவில், “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”,
ஜில்லாவில், “கண்டாங்கி… கண்டாங்கி”, கத்தியில், “செல்பி புள்ள”, புலியில், “அடி ஏண்டி ஏண்டி என்ன கொல்லுற”, தெறியில், “ஏ செல்ல குட்டி”, பிகிலில், “என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்”, மாஸ்டரில், “குட்டி ஸ்டோரி”, பீஸ்ட்டில், “ஜாலியோ ஜிம்கானா”, வாரிசில், “ரஞ்சிதமே..ரஞ்சிதமே”, லியோவில், “நான் ரெடி தான் வரவா”, கோட்டில், “விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள்”
இப்போது கடைசியாக 2026 இல் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் வரும் தளபதி கச்சேரி மற்றும் செல்ல மகளே போன்ற பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
இதுவரைக்கும் விஜய் அவர்கள் தனது படங்களிலும், பிறர் படங்களிலும் தனது காந்த குரலால் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் குத்தாட்டம் போட்டவை.
அதேபோல் விஜய் அவர்கள் பாடாமல் அவர் திரைப் படத்தில் வந்த பல பாடல்களும் ஹிட் அடித்தன. எடுத்துக்காட்டாக காதலுக்கு மரியாதையில் வரும், “என்னை தாலாட்ட வருவாளா..!”, பகவதியில், “ஜூலை மலர்களே.. ஜூலை மலர்களே”, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வரும், “இன்னிசை பாடிவரும், மேகமாய் வந்து போகிறாய், இருவது கோடி நிலவுகள், தொடு தொடு எனவே”போன்ற பாடல்களும் ரசிக்க வைத்தது.
இப்போது விஜய் அவர்கள் சினிமா துறையை விட்டு, அரசியலுக்கு செல்வதால் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்திலும், கவலையிலும் இருக்கிறார்கள். எனவே எப்படி இருந்தாலும் தளபதி அவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வருவது சிறப்பான ஒன்றுதானே.!
மக்களே இப்போது நீங்கள் சொல்லுங்கள் விஜய் அவர்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்பதை கமெண்டில் தெறிக்கவிடுங்கள்…!