ஜெயித்த ஜெயிலர்.. நெல்சனை வாழ்த்திய நடிகர் விஜய்!

விஜய் - நெல்சன்
விஜய் - நெல்சன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே யார் சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனை வெடித்து வருகிறது. தற்போது ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் உள்ள நிலையில் அடுத்ததாக விஜய்க்கு தான் இது என பலரும் கூறிவருகிறார்கள். இதன் ஆரம்ப புள்ளியாக விஜய்யின் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தான் இருந்தது.

அதில் சரத்குமார் போன்ற பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று மேடையில் பேசி இருந்தனர். இதனால் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தை பற்றி விஜய் ரசிகர்கள் மோசமாக விமர்சித்தும் வந்தனர்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெல்சன் மோசம் செய்து விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். இப்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி இருக்கும் நிலையில் முதல் நாளே விஜய் இந்த படத்தை பார்த்து விட்டாராம். தளபதி படத்தைப் பார்த்த உடனே இயக்குனர் நெல்சனுக்கு போன் செய்து உள்ளார்.

கண்டிப்பாக ஜெயிலர் வெற்றி உறுதி என்று நெல்சனுக்கு வாழ்த்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் பேசிய நெல்சன், பீஸ்ட் படத்தை இயக்கும் போது ஜெயிலர் கதையை விஜய் இடம் கூறி இருக்கிறாராம். இப்போது ரஜினியிடம் இந்த கதையை கூறுமாறு விஜய் நெல்சன் இடம் கூறியிருந்தாராம்.

அதேபோல் ரஜினிக்கும் இந்த கதை பிடித்து போக நெல்சனை லாக் செய்திருந்தார். இதற்கு முன்னதாக பீஸ்ட் படம் தோல்வி அடைந்திருந்தாலும் நெல்சனை விடாமல், ரஜினி ஜெயிலர் படத்தை இயக்க சம்மதித்தார். அதற்கான நியாயத்தை ஜெயிலர் படம் மூலம் நெல்சன் கொடுத்திருக்கிறார்.

ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி மோதி கொண்டிருக்கும் நிலையில், விஜய் நெல்சனை தொடர்பு கொண்டு ஜெயிலர் படத்திற்கு வாழ்த்து கூறி தாங்கள் நட்புடன் தான் இருக்கோம் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இனியாவது அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை ஓயுமா என்று பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com