புடவைகளை வைப்பதற்கென்றே ஒரு வீடு வைத்திருக்கிறாராம் ஒரு நடிகை. யாரென்று பார்ப்போமா?
பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் எப்போதும் சேலையையே விரும்புவார்கள். கட்டுகிறார்களோ இல்லையோ சேலை வாங்குவதை நிறுத்தவே மாட்டார்கள். சேலைகள் வைப்பதற்கென்று எத்தனை பீரோக்கள் வேண்டுமென்றாலும் கூட வாங்கிவிடுவார்கள். சிலர் சேலையை சேகரித்தும் வைப்பார்கள். எதற்கு என்று கேட்டால், மகளுக்குத் தர என்று சொல்வார்கள். ஒரு சாதாரண பெண்ணே இப்படியெல்லாம் செய்யும்போது, நடிகைக்கு சொல்லவா வேண்டும். அதுவும் மாடர்ன் நடிகை என்றால், சேலையெல்லாம் அவ்வளவு வைத்திருப்பார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான்.
ஆனால், அன்றைய காலத்தில் ஷூட்டிங் முதல் பட நிகழ்ச்சிகள் வரை நடிகைகள் சேலையையே அதிகம் கட்டுவார்கள். இதனால் அதிகமாக சேலை வாங்கி அடுக்கி வைப்பார்கள். ஆனால், ஒரு நடிகைக்கு ஒரு வீடே பத்தவில்லை என்று, சேலை வைப்பதற்கு மட்டுமே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.
அது வேறு யாரும் இல்லை. 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்த ‘நடிகை நளினி’. ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின்மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நளினி. படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய, ‘நடிகர் ராமராஜனை’ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முற்றிலுமாக திரை உலகில் இருந்து விலகிக் கொண்டார். இவர்களுக்கு ‘அருணா, அருண்’ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பிறகும் இருவரும் ஒரே வீட்டில்தான் சேர்ந்து வாழ்கிறார்கள். இதுகுறித்து நளினி கூறும்போது, விவாகரத்து ஆனாலும், நான் அவரை இன்னும் காதலிக்கிறேன் என்று கூறுகிறார்.
இப்போது சில படங்களிலும் சீரியல்களிலும் மட்டுமே நடித்து வருகிறார் நளினி. இவர் ஒரு பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் குறித்து பேசியிருக்கிறார். ‘தான் ஒரு முறை கட்டிய புடவையை திரும்ப கட்ட மாட்டேன்’ என்றும், அது போல் ‘ஒரு நாள் கூட புது புடவை கட்டாமல் இருக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் தன்னுடைய கட்டிய புடவைகளை வைப்பதற்கு என்றே ஒரு தனி வீடு வைத்திருப்பதாகவும், தனது பிள்ளைக்கும் அவ்வப்போது புடவை வாங்கி தருவதாகவும் கூறினார்’.