செஸ் விளையாட்டில் உருவான சாதி வெறி: 'தி கிராண்ட் மாஸ்டர்' விமர்சனம்!

தூய்மைப் பணியாளரின் செஸ் கனவும், ஆதிக்க வர்க்கத்தின் சதியும் — 'தி கிராண்ட் மாஸ்டர்' திரைவிமர்சனம்!
தி கிராண்ட் மாஸ்டர்
தி கிராண்ட் மாஸ்டர்
Updated on
ரேட்டிங்(3 / 5)

கபடி, கால் பந்து, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் உள்ள ஜாதி, சமூக அரசியலை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் செஸ் விளையாட்டில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்தி 'தி கிராண்ட் மாஸ்டர்' என்ற திரைப்படம் வந்துள்ளது.

இப்படத்தில் அபர்ணதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். வெற்றி செழியன் இப்படத்தை இயக்கியுள்ளார். அபர்ணதி நகரத்தில் தெருக்களை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளராக இருக்கிறார். இவரது கணவரும் இதே வேலையை செய்து வருகிறார். இவருக்கு செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கிறது. பல செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார். இது பல ஆதிக்க ஜாதி மனப்பான்மை கொண்டவர்களுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் பல டார்ச்சர்களை தாண்டி தொடர்ந்து செஸ் விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் பெரும் பணக்காரராக இருக்கும் சுரேஷ் மேனன் மகளுடன் செஸ் விளையாட்டில் மோத அபர்ணதி தயாராகிறார். சுரேஷ் மேனன் இவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அவமானப்படுத்துகிறார். "இந்த போட்டியில் நான் ஜெயித்து விட்டால் நீ என் ஏரியாவிற்கு வந்து தூய்மை பணி செய்ய வேண்டும். ஒருவேளை நான் தோற்று உன் மகள் ஜெயித்து விட்டால் நான் உன் வீட்டிற்கு வந்து உன் வீட்டை சுத்தப்படுத்துவேன்" என்று சவால் விடுகிறார்.

தி கிராண்ட் மாஸ்டர்
தி கிராண்ட் மாஸ்டர்

இந்த சவாலை சுரேஷ் மேனன் ஏற்றுக்கொள்கிறார். போட்டியில் அபர்ணதி ஜெயித்து விடுகிறார். சுரேஷ் மேனன் வேறு வழியில்லாமல் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்கிறார். இந்த அவமானம் தாங்காமல் சுரேஷ் மேனன் அபர்ணதியின் கணவரை கொன்று விடுகிறார். மேலும் இனி நீ செஸ் விளையாட்டு விளையாட கூடாது என்று பயமுறுத்தி வைக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு அபர்ணதி மகன் செஸ் விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கிறான்.

சுரேஷ் மேனனுக்கு தெரிந்தால் தன் மகனையும் கொன்று விடுவார் என்று பயந்து மகனுக்கு தெரியாமல் பல செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். ஒரு கட்டத்தில் சுரேஷ் மேனனுக்கு அபர்ணதியின் மகன் தான் செஸ் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் என்று தெரிகிறது. இந்த சிறுவனை தனது நிறுவனத்திற்கு ஆட அழைக்கிறார். ஆனால் அபர்ணதி மறுத்து விடுகிறார். மகனையும் கொலை செய்ய முயற்சிக்கிறார் சுரேஷ் மேனன். இறுதியில் என்ன ஆனது என்பது கிராண்ட் மாஸ்டர். சொல்கிறது.

கதை..

இதுவரை தமிழ் சினிமாவில் விளையாட்டு போட்டிகளை மையப்படுத்திய பெரும்பான்மையான படங்களில் ஹீரோ தான் பாதிக்கப்படுபவராக இருப்பார். இறுதியில் ஹீரோ வில்லன்களுடன் மோதி விளையாட்டில் ஜெயிப்பார். ஆனால் இந்த படத்தில் ஹீரோயின் மோதுகிறார்.ஹீரோயினும் தனது மகனுக்காக பண முதலைகளுடன் மோதுகிறார். ஒரு பெண்ணை பின்புறமாக வைத்து கதை எடுத்ததற்காக டைரக்டரை நாம் முதலில் பாராட்டி விடலாம்.

திரைக்கதை...

படத்தின் திரைக்கதையை பொருத்தவரை முதல் பாதி சிறிது நாடகத்தன்மையுடன் இருக்கிறது. வில்லன் என்ன செய்வார் என்று யூகிக்க முடிவது பல படங்களில் பார்த்த உணர்வு வருகிறது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி பரபரப்புடன் நகருகிறது. சுரேஷ் மேனனின் சதியை அபர்ணதி அறிவுபூர்வமாக எதிர்கொண்டு முறியடிப்பது சற்று ரசிக்கும்படி உள்ளது. படத்தின் முடிவும் நாம் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக இருக்கிறது.

காட்சிகள்..

படத்தில் இரண்டாம் பாகம் பதில் பாதியில் வரும் பல காட்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளது. "ஒரு நாள் நீ குப்பை அல்லுபவனாக வாழ்ந்து பார் என்று சவால் விடும் இடமும் சுரேஷ் மேனன் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் இடமும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சிறுவன் தான் தூய்மை பணியாளரின் மகன் என்பதால் கிடைத்த அவமானத்தை தாங்கிக் கொண்டு ஜெயித்த இடம் மனதில் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஒரு போதையா? தேசிய விளையாட்டு எது? அதிரடி வசனங்களால் அதிரவைக்கும் புதிய படம் 'அங்கீகாரம்'!
தி கிராண்ட் மாஸ்டர்

படம்  முடிந்த பிறகு நிஜமான தூய்மை பணியாளர்கள் பேசும் வசனங்கள் மனதில் நிற்கின்றன "எங்க மேலே குப்பையை கொட்டுவாங்க. குப்பையை அல்லுறது  உன் வேலைதானே, சாப்பிடவே முடியாது அவ்வளவு நாத்தமாய் இருக்கும் " என்று தூய்மை பணியாளர்கள் பேசும் இடம் படம் முடிந்த பின்பு கூட நம்மால் சீட்டிலிருந்து வெளியே வர மனம் மறுக்க வைக்கிறது. படத்தில் ஆங்காங்கே இருக்கும் சில குறைகளை படத்தின் இறுதியில் நிஜமான தூய்மை பணியாளர்கள் பேசும் போது நம்மை மறந்து விட வைக்கிறது.

நடிப்பு..

அபர்ணதி இதுவரை பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக பத்து வயது சிறுவனுக்கு அம்மாவாக ஒரு நல்ல நடிப்பை தந்துள்ளார். ஒரு தூய்மை பணியாளர் அவமானப்படுத்தும் போது அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை தனது நடிப்பால் மிகச் சிறப்பாக தந்துள்ளார். சோகம், வைராக்கியம் இரண்டையும் கலந்த ஒரு நல்ல நட்பை நடிப்பை தந்துள்ளார். சுரேஷ் மேனன் ஒரு கார்ப்பரேட் வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார். இவர் கேரக்டரை இன்னும் கூட மெருகேற்றி இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மணிரத்னம் படத்தின் ரகசிய கதை இதுதானா? ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா புதிய படம்!
தி கிராண்ட் மாஸ்டர்

இசை..

தினேஷ் அந்தோணியின் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை அளவாக இருக்கிறது.சொல்லப்படாத வலி... இந்த படத்தை நீங்கள் பார்க்கும் போது தூய்மை பணியாளர்களை பற்றி நம் சமூகம் கொண்டுள்ள மதிப்பும் தூய்மை பணியாளர்களின் வாரிசுகள் பொது இடங்களில் ஜெயிக்க தன் மீது உள்ள சமூக கொண்டுள்ள பார்வையும் தாண்டி ஜெயிக்க வேண்டியுள்ளது என்பதை இப்படம் புரிய வைத்துள்ளது. 

படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட கருத்தில் விலகாமல் இறுதியில் சொன்ன இடத்தில் இயக்குனர் பாராட்டை பெறுகிறார். தி கிராண்ட் மாஸ்டர் விளிம்பு நிலையில் இருந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் சல்யூட் செய்யும் படம். நகரங்களை சுத்தப்படுத்துபவர்களை தூய்மை பணியாளர்கள் முன் கள பணியாளர்கள் என பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதுமா? மனதிலும், சமுதாயத்திலும் மாற்றம் வேண்டாமா? என்ற கேள்வியை இப்படம் எழுப்புகிறது.

விளிம்பு நிலை மக்களின் போராட்டத்தையும் தூய்மைப் பணியாளர்களின் நிஜமான வலியையும் செஸ் விளையாட்டின் வழியே அழுத்தமாகப் பேசும் ஒரு முக்கியமான திரைப்படமாக 'தி கிராண்ட் மாஸ்டர்' அமைந்திருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com