ரசிகரை அடித்த அஜித், பின் காசு கொடுத்து அனுப்பிய சம்பவம்!

Ajith
Ajith
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

நடிகர் அஜித்திற்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். அந்தவகையில் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகரை அடித்திருக்கிறார் என்று நடிகை ஆர்த்தி கூறியிருக்கிறார்.

ஒருகாலத்தில் தல தளபதி ரசிகர்கள் போட்டிபோடும் அழகே தனி. ஒவ்வொருமுறையும் இருவர் படங்களும் நேருக்கு நேர் மோதும்போது, தமிழகமே ஒருமுறை குலுங்கிவிடும். பண்டிகை தினம் கூட அந்தளவிற்கு சிறப்பாக இருக்காது. ஆனால், சமீபக்காலமாக அஜித் ஒரு ஆண்டுக்கு ஒரு படம் என்றுதான் நடிக்கிறார்.

அதேபோல் விஜயின் படங்களும் குறைந்து வருகிறது. விஜய் இன்னும் ஒரு படத்துடன் சினிமாத்துறையை விட்டு விலகவுள்ளார். போகிறபோக்கில் அஜித்தும் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்பதுபோல்தான் உள்ளது.

இந்தநிலையில் நடிகை ஆர்த்தி, எபோதோ ஒருமுறை நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். படபிடிப்பு தளத்தில் அஜித் ஒரு ரசிகரை கன்னத்தில் பலார் என்று அடித்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

பொதுவாக பல நடிகை நடிகர்கள் கோபத்தில் போட்டோ எடுக்க வரும் ரசிகர்களையும், மைக் தூக்கி வரும் செய்தியாளர்களையும் அடித்ததுண்டு. இந்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே தெரிவது கிடையாது.

இதையும் படியுங்கள்:
'சட்னி சாம்பார்'... யோகி பாபு - ராதாமோகன் நகைச்சுவைச் சிற்றுண்டி!
Ajith

இதுகுறித்து ஆர்த்தி கூறியதாவது, "ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு ரசிகர் தலையில் அஜித் பெயரைப் பச்சைக் குத்தி 'தல, தல' என்று கத்திக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த நடிகர் அஜித் அவரை வரவழைத்து அவரை பலார் என்று கன்னத்தில் அடித்தார்.

அதன் பின் காசு கொடுத்து போய் மொட்டை அடித்து கொண்டு வா என்று கூறினார். பின்பு அந்த ரசிகர் மொட்டை அடித்து வந்த பின்னர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு, "இனி இப்படி செய்ய கூடாது அன்பு மனசில் இருந்தாபோதும்” என்று அறிவுரை கூறி அனுப்பியதாக ஆர்த்தி கூறினார். 

logo
Kalki Online
kalkionline.com