ரூ.3 கோடிக்கு தங்க கேக்... லெஜெண்ட் பட நடிகைக்கு பரிசளித்த பாடகர்!

Urvashi Rautela
Urvashi Rautela

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தி லெஜெண்ட் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது பிறந்த நாளுக்கு தங்க முலாம் பூசிய கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2015 ஆம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா. தனது 15 வயது முதல் மாடலிங் துறையில் அசத்தி வரும் ஊர்வசி ரவுடேலா 2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தை தட்டி சென்றவர். மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது.

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடேலா தமிழில் 'லெஜண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் இது மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.

Urvashi Rautela
Urvashi Rautela
இதையும் படியுங்கள்:
வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து இனி இவரும் குக்வித் கோமாளியில் இல்லை... ரசிகர்கள் வேதனை!
Urvashi Rautela

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டினார். இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் அவருக்கு பரிசளித்து உள்ளார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com