இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு வந்த ரஷ்ய நடன கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
இளையராஜா பாடலுக்கு இன்றும் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்தக் காலத்து ஆட்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை அனைவருக்குமே இவரின் பாடல் ஒரு மருந்து என்றே கூறலாம். இவருடைய பாடல்களை கேட்டுத் தூங்கும் இளைஞர்கள் ஏராளம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும். அதுவும் இசை மூலமே நம்முடைய உணர்வுகளை மாற்றும் திறன் இவரின் பாடல்களுக்கு உண்டு. இசையில் ஊறிப்போன இவர் வரிகளைக் கொடுப்பதிலும் சிறந்தவர்தான்.
இளையராஜா 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதே போன்று 20000க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டங்களில் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தி வந்த இளையராஜா பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவில் இணைந்து 10 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
உலகம் முழுவதும் இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கான ஒரு சாட்சி காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம்! சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு ரஷ்யாவைச் சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களுடைய ஸ்டைலில் ஓ பட்டர்ஃளை பட்டர்பஃளை என்ற பாடலுக்கும், பூவே செம்பூவே என்ற பாடலுக்கும் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள்.
ஓ ஃபட்டர்பிளே என்ற பாடல் மீரா என்ற படத்தில் வரும். இளையராஜா இசையில், இந்த பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் சோலோ வெர்ஷனில் ஒரு பாடலும், ஆஷா போஸ்லே உடன் இணைந்து இதே பாடலையும் பாடி இருந்தார். அதேபோல், பூவே செம்பூவே என்ற பாடல் இடம் பெற்ற படம் சொல்ல துடிக்குது மனசு. இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வாலி எழுதியிருக்கிறார். மேலும், ஆ கே ஜே யேசுதாஸ் மற்றும் சுனந்தா இந்த பாடலை பாடியிருக்கின்றனர்.
ரஷ்ய நடன கலைஞர்கள் நடனத்திற்கு தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் இளையராஜா.