ஜாம் ஜாம் என்று நடந்த 'இருட்டுக்கடை அல்வா' குழுமத்தின் இல்லத் திருமண விழா!

Iruttu kadai halwa family  wedding
Iruttu kadai halwa family wedding
Published on

புளியங்குடி சாலையில் உள்ள சொக்கம்பட்டி என்ற ஊர் ஒரு காலத்தில் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீனில் உள்ள குதிரைகளுக்கு நல்ல தரமான உணவளிக்க வட இந்தியர்கள் சிலர் வந்தனர்.

அவர்களுடைய பராமரிப்பில் இந்த ஜமீனில் இருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா.

Iruttu kadai halwa family
Iruttu kadai halwa family

காலப்போக்கில் அந்த ஜமீன் அழிந்தவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. அவர்கள் திருநெல்வேலியில் குடியேறினார்கள். அவர்களில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங் என்பவர் தாமிரபரணி நீர் எடுத்து அல்வா தயாரித்தார். அந்த அல்வாவை சுவைத்த திருநெல்வேலி மக்கள் அதன் சுவையில் மயங்கி, அதற்கு அடிமையானார்கள். இந்த பிஜிலி சிங் என்பவர்தான் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கி வைத்தவர். 1940ல் தொடங்கப்பட்டது இந்த அல்வா கடை. இப்பொழுது அவர்களுடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் அந்தக் கடை நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிளாக் டீ - பிளாக் காபி... நிபுணர்கள் பரிந்துரைப்பது எது?
Iruttu kadai halwa family  wedding

இருட்டுக்கடை அல்வாவிற்கு என்று பிரத்தியேக சுவை வரக்காரணம் அல்வா செய்ய பயன்படுத்தப்படும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால்தான் அரைக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற்கென பிரத்தியேக சுவையை தருவதாகச் சொல்லப்படுகின்றது. கைகளால்தான் இந்த அல்வாவை கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

இந்த இருட்டுக்கடை மிகவும் பழைமையான கடையாகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றவாறு இருட்டான சூழ்நிலையில்தான் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வரை 40 வாட்ஸ் குண்டு பல்புதான் அந்தக் கடையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது சிறிது மாறுதல் செய்யப்பட்டு 200 வாட்ஸ் பல்ப் ஒளிர்கிறது.

இந்தக் கடை பழைய பாரம்பரிய முறைப்படி இன்னும் அதே பழைய கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இங்கு பயன்படுத்தப்படும் பணப்பெட்டியில் தொடங்கி அல்வா சுமந்து செல்லும் கொள்கலன்கள் வரை அனைத்தும் பழைய பாரம்பரியம் மிக்கவையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருட்டுக்கடை சாயங்காலம் சுமார் 5.30 மணிக்கு மேல் திறக்கப்படும். இரவில் மட்டுமே அல்வா கிடைக்கும் என்பதால் அதற்கு இருட்டுக்கடை அல்வா என்று பெயர் ஏற்பட்டுவிட்டது.

இதையும் படியுங்கள்:
பெண்களின் அழகை மேம்படுத்தும் எளிய இயற்கை வழிமுறைகள்!
Iruttu kadai halwa family  wedding

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் இல்லத் திருமண விழா நெல்லையில் மிக விமர்சையாக நடைபெற்றது. பலர் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

திருமண விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆட்டம் பாடம் கொண்டாட்டம் என அந்த இடமே களைகட்டியது.

இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். அதில் கூறியுள்ளதாவது, எங்கள் இருட்டுக்கடை குடும்ப திருமணவிழா உங்கள் அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சிறப்புற்றது. இத்திருநாளை உடன்நின்று சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி எனக்கு குறிப்பிட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com