விஜய் தேவரகொண்டாவின் Family Star படத்தின் ட்ரைலர் வெளியானது!

Family star
Family star
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் Family star படத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குனர் பரசுராம் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா வைத்து கீதா கோவிந்தம் படத்தை இயக்கினார். இப்படம் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்குமே நல்ல வாய்ப்பாக அமைந்தது. பரசுராம் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணி நல்ல வெற்றியை பெற்றதையடுத்து மீண்டும் family star படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் சீதா ராமம் கதாநாயகி மிருணால் தாக்கூர் நடித்துள்ளார். இவர் சீதா ராமம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். பின்னர் நானியுடன் ஹாய் நானா படத்தில் நடித்து தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தார். இதனால் இவரின் அடுத்தப் படமான Family Star படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

மேலும் இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர்தான் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் மற்றும் உலக புகழ்பெற்ற காதலன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இந்தப் படத்தின் வீடியோ கிளிம்ஸ் சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.

இதையும் படியுங்கள்:
சியான் 62 படத்தின் அப்டேட்கள்... பெயர் அறிவிப்பு எப்போது தெரியுமா?
Family star

அதேபோல் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெளியானது. இதன் முழு படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிந்த நிலையில் இந்தாண்டு மார்ச் மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுதான் படத்தின் ட்ரைலரே வெளியாகியுள்ளது. இப்படத்தில் காதல், சண்டை, மிடில் கிளாஸ் குடும்பம் என அனைத்தும் உள்ளது என்பது ட்ரைலர் மூலம் தெரியவருகிறது. இதனையடுத்து ட்ரைலர் ரசிகர்களுக்கு திருப்தியாக அமைந்ததால் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Family star படம் இந்தாண்டு ஏப்ரல் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com