பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் சுரேஷ் மற்றும் நதியா இருவரையும் சேர்த்து வைத்து பல கிசுகிசுக்கள் பேசப்பட்டன. இத்தனை வருடங்கள் கழித்து தற்போது இதுகுறித்து அவர் பேசியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் 80 காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களில் சுரேஷும் ஒருவர். அவர் தொடர்ந்து நதியா, ரேவதி போன்றவர்களுடன் நடித்து வந்தார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் மட்டுமல்ல சமையலிலும் பட்டம் வென்றவர்.
இவர் பன்னீர் புஷ்பங்கள் என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என பலப்படங்களில் நடித்திருந்தார்.
இதற்கிடையே சுரேஷ் மற்றும் நதியா இடையே காதல் ஓடுவதாக அப்போது பல கிசுகிசுக்கள் வந்தன.
இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுரேஷ் இதுகுறித்து பேசியிருக்கிறார். அதாவது, “என்னைப் பற்றி நிறைய காதல் கிசுகிசுக்கள் வந்தது உண்மைதான். அதில் என்னையும் நதியாவையும் சேர்த்து வைத்து நிறைய எழுதி இருந்தார்கள். ஆனால், உண்மையில் நதியா எனது பெஸ்ட் பிரண்ட். அவருடன் நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். அவருக்கும் எனக்கும் கிசுகிசு இருந்ததாக சொல்வதற்கு காரணம் நான் அவருடன் நிறைய படங்கள் பண்ணது தான்.
அதேபோல் அவருடைய காதலர் பெயரும் என் பெயரும் ஒரே மாதிரிதான் இருக்கும். அவர் பெயர் சிரிஷ். என் பெயர் சுரேஷ், அதுக்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அவர் சூட்டிங்கில் இருக்கும்போது எப்போதுமே தன்னுடைய காதலனுடன் தான் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவரையே நதியா திருமணமும் செய்து கொண்டார். எனக்கும் நதியாவுக்கும் இடையே காதல் வர வாய்ப்பே இல்லை. காரணம் நான் அவருக்கு தம்பி மாதிரி.
நதியா எப்போதும் ஒரு க்ளேரிட்டியாக இருப்பார். இத்தனை ஆண்டுகள் தான் சினிமாவில் நடிக்கணும், அதற்குப் பின் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும் என்று தெளிவாக இருந்தார். நாங்கள் இப்பவும் ஒரு whatsapp குரூப்பில் நண்பர்களாகத்தான்இருக்கிறோம். எங்களுடைய 80ஸ் whatsapp குரூப்பில் ரஜினிசாரும் இருக்கிறார்.” என்று பேசினார்.