பிரபலமான OTT தளத்தில் 'துணிவு’?

துணிவு
துணிவு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘ துணிவு ’. இப்படத்தில் மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக் கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 11 அன்று பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளதால், துணிவு ரிசல்ட் எப்படி இருக்கும் என பெரிய விவாதமே நடந்த நிலையில் இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்தப் படம் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருந்தது என சொல்லப் படுகிறது. துணிவு படத்தின் ட்ரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே . இது பல கோடிகளை அள்ளிக்குவித்து வசூலில் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு நாள் லாபத்தினை பெட்ரி தந்தது எனலாம்.

OTT
OTT

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட்நிறுவனம் பெற்றிருந்தது தற்போது இப்படத்தின் OTT வெளியீட்டிற்கான நடவடிக்கைகளையும் தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படம் பிப்ரவரி 10 முதல் OTT இல் ஸ்ட்ரீமிங்தொடங்கும் என்றும். மேலும், ‘துணிவு’ படம் அதன் 30வது நாள் முடிந்தவுடன் பிரபலமான OTT தளத்தில் படம் வெளியாகும் கூறப் படுகிறது. பல்வேறு பிரபலமான OTT தளங்கள் துணிவுக்காக முட்டி மோதியது. அதில் பிரபல OTT நிறுவனம் ஒன்று அதன் உரிமையை கைப்பற்றுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com