'துணிவு' ரிலீஸ் பொங்கல் அன்று அல்ல... இதோ வெளியானது ரிலீஸ் தேதி!

'துணிவு' ரிலீஸ் பொங்கல் அன்று அல்ல... இதோ வெளியானது ரிலீஸ் தேதி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'துணிவு'. அதிரடி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்டத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், யோகிபாபு உட்பட பலரும் நடித்துள்ள நிலையில், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் 'பேவியு ப்ரஜெக்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களான 'துணிவு' மற்றும் 'வாரிசு' படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் என ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்படாமால் இருந்த நிலையில் இப்போது முதலாவதாக 'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது 'துணிவு' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதல் ஆளாக அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 11ம் தேதி 'துணிவு' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

logo
Kalki Online
kalkionline.com