திரையரங்குகளில் இன்று வெளியாகும் படங்கள்: அதிக எதிர்பார்ப்பில் ‘வித் லவ்’..!

இன்று திரையரங்குகளில் வெளியாகும் 8 திரைப்படங்களின் சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
Today released movies
with love, anomie, Ashakal Aayiram, kadhal kadhai sollavaimage credit-IMDb
Published on

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வந்தாலே பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் (இன்று) 8 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். சரி இன்று வெளியாகும் படங்களின் சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

வித் லவ்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மற்றும் MRP Entertainment இணைந்து தயாரித்துள்ள படம் 'வித் லவ்'. டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் இவருடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 6ம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனோமி

தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு இயக்குநர்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் 7 படங்கள்: எதிர்பார்ப்பில் ‘4’... வெற்றி யாருக்கு?
Today released movies

அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.

காதல் கதை சொல்லவா

இளம் காதலர்களுக்கும், காதல் கதைகளை விரும்பும் ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தை பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார். சனில் களம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ஜெயராம், நகுல், விஜய் சேதுபதி, மேஷ் திலக், ஆத்மிகா மற்றும் ரித்திக்கா சென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.ஜெயசிந்திரன் மற்றும் சரத் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

யோகிடா

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான யோகிடா திரைப்படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்க, இவருடன் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்​துள்​ள இந்த படத்திற்கு பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

ரெட் லேபிள்

இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் லேபிள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் முனிஷ்காந்த் நடிக்க, நாயகியாக அஸ்மின் மற்றும் இவர்களுடன் இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்.பார்த்திபன் எழுதி ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

கில்லி மாப்பிள்ளை

கே.என்.பத்மராஜா எழுதி, இயக்கிய திரைப்படம் கில்லி மாப்பிள்ளை. ஹனுமான் பிக்சர்ஸ் சார்பில் மீனா வெங்கடாச்சலம் தயாரித்துள்ள இந்த படத்தில் திவ்யா தாமஸ், டி.எஸ்.ஆர், மற்றும் கிரேன் மனோகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் அம்பானி சங்கர், திருப்பாய்ச்சி பெஞ்சமின், ஞான சம்பந்தம் மற்றும் மீசை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.வி. குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஆர். வெங்கட் ஒளிப்பதிவைக் கையாளுகிறார்.

யூபோரியா

பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பூமிகா சாவ்லா மற்றும் சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், நாசர், விக்னேஷ் கவிரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கால பைரவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரவீன் கே. போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் 6 திரைப்படங்கள்- அதிக எதிர்பார்ப்பில் ‘திரௌபதி 2’..!!
Today released movies

அஷகல் ஆயிரம்

ஜி.பிரஜித் இயக்கத்தில், ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. இது தந்தை-மகன் இடையேயான உறவு மற்றும் கனவுகளைப் பற்றிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாகும். இஷானி கிருஷ்ணா, ஆனந்த் மன்மதன், திலீப் மேனன், ரமேஷ் பிஷாரடி, ஆஷா ஷரத், ஷரபுதீன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சனல் தேவ் இசையமைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com