

27/2/2026 தியேட்டர் ரிலீஸ் தமிழ்ப்படங்கள்- ஒரு பார்வை
1. தாய் கிழவி (Thai Kizhavi) :
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்தப் படம், டீசர் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்புக்கான காரணங்கள்:
படத்தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
இந்தப்படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயனின் நண்பர். படம் எப்படிப்போகுது என்று ரிசல்ட் தெரியும் முன்பே அடுத்தடுத்து அவர் நடிக்கும் இரண்டு பட வாய்ப்புகளை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் வசம் தந்து விட்டார்.
சிவகார்த்திகேயன் நடிக்க கமல் தயாரிக்க இருக்கும் சேயோன் படத்தின் இயக்குநரும் சிவக்குமார் முருகேசன் தான். விக்ரம் நடித்த வீர தீர சூரன் மாதிரி இது ஒரு ஆக்சன் திரில்லர். அந்தப்படத்தின் ப்ரோமோ ஸ்டில் வெளியானதும், தாய் கிழவி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.
ராதிகாவின் கெட்டப் கிட்டத்தட்ட மண்வாசனை 'ஒச்சாயிக்கிழவி' காந்திமதி கெட்டப் மற்றும் முதல் மரியாதை வடிவுக்கரசி கெட்டப்பில் கலக்கி இருக்கிறார்.
இது ஒரு காமெடி வில்லேஜ் ட்ராமா : படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை டீசர்,ட்ரெய்லர் கட் பார்த்து யூகித்த வரையில்,
நாயகி ஒரு கிராமத்தில் தனியாக பரம்பரை வீட்டில் வசிக்கிறார். ஊர் பூரா வட்டிக்குப்பணம் விட்டு அதை வசூலிக்கும் தொழில் செய்து வருபவர். இவருக்கு நான்கு மகன்கள், அவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. ஒரு கட்டத்தில் நாயகி உடல் நலம் குன்றி படுத்த படுக்கை ஆகிறாள். ஆனால் ஆள் இழுத்துக்கொண்டே இருக்கிறதே தவிர போனபாடில்லை. அவர் ஏதோ ஒரு ரகசியம் சொல்ல வருகிறார். ஆனால் யாருக்கும் அது புரியவில்லை.
ஒரு வேளை ஏதாவது புதையல் ரகசியமாக இருக்கலாம். அதை நான்கு மகன்கள் கண்டுபிடித்தார்களா என்பதே கதை.
இதில் நாயகி ஆக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். அவரது ஒப்பனை பிரமாதமாகப் பேசப்படுகிறது. இவரது மகன்களாக சிங்கம்புலி,அருள் தாஸ்,பால சரவணன்,முனீஷ்காந்த் ஆகிய நால்வரும் நடித்திருக்கிறார்கள். குணச்சித்திர நடிகர் இளவரசும் படத்தில் நடித்திருக்கிறார்.மொத்தக்கதையும் ஒரு கிராமத்தில் நடக்கிறது.
இசை: நிவாஸ் கே. பிரசன்னா | OTT: ஜியோ ஸ்டார் (JioStar).
இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட் ஸ்டார் வாங்கி இருக்கிறது
2. ஆழி (Aazhi)
சித்தி ராதிகாவிற்குப் போட்டியாகச் 'சித்தப்பா' சரத்குமார் களமிறங்கும் ஆக்ஷன் த்ரில்லர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஒரு மீன் பிடிப்படகு, கடற்கரை, ஒரு வீடு என 3 இடங்களில் நடைபெற்று இருக்கிறது.
பெரும்பாலும் கடலிலேயே படமாக்கப்பட்ட படம். ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்..படத்தின் இசை ஜாஸ்லி கிப்ட்.
சரத்குமார் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறார். அவருடன் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ட்ரெய்லரைப் பார்க்கும்போது இது ஒரு பக்கா 'ஆக்ஷன் ரிவெஞ்ச் த்ரில்லர்' (Action Revenge Thriller) ஆக தெரிகிறது.
3. Fourth Floor
இது ஒரு தமிழ்ப்படம் தான், ஹாரர் மிஸ்டரி திரில்லர்.ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா இருவரும் நாயகன், நாயகி.இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
நாயகன் அவனது முன்னாள் காதலியால் சென்னையில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார். என்ன காரணத்துக்காக முன்னாள் காதலி இப்படி செய்தார் என்பதை கண்டுபிடித்து அவளது திட்டத்தை முறியடிக்க முயற்சிப்பதே மீதிக்கதை.
கதை,திரைக்கதை,இயக்கம் : எல் ஆர் சுந்தர பாண்டி
பிற வெளியீடுகள் :
1.ஏ படம் டாக்டர் அம்பேத்கர் ரிட்டர்ன்ஸ் :
டைட்டிலில் ஏ படம் என்று இருந்தாலும் இது யு படம் தான். அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறை சொல்லும் படம் இது. சிவாங்கோ என்பவர் இயக்கி இருக்கிறார். இது ஒரு லோ பட்ஜெட் படம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் முக்கியமான படைப்பு.
2. சட்டங்கள் ஆயிரம்:
இதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் தான்...பிராட்வே சுந்தர் இயக்கி இருக்கிறார்
நாயகி குடும்ப சூழல் காரணமாக பலரிடம் கடன் வாங்கி மாட்டிக்கொள்கிறார்.வட்டி மட்டும் மாதம் ரூ 5 லட்சம் கட்ட வேண்டி இருக்கிறது.அவர் என்ன செய்தார்?எதற்காக கடன் வாங்கினார்? என்பதை விளக்கும் கதை இது.முற்றிலும் புதுமுகஙகள் நடிக்கும் படம் இது.
3. The Rise of Asoka : கன்னடம்/தமிழ்
இது ஒரு கன்னடப்படம். தமிழ் டப்பிஙகில் வெளியாகிறது. சதீஷ் நினசம், சப்தமி கவுடா இருவரும் நடிக்க வி.வினோத் இயக்கத்தில் உருவான படம் இது.
கிராமத்தில் நடக்கும் ஆக்சன் ட்ராமா இது.சதீஷ் நினசம் நடிப்பில் வெளிவரும் முதல் 100 கோடி வசூல் படம் என கன்னட பத்திரிக்கைகளில் விளம்பரம் வருகிறது.
ரீ-ரிலீஸ் ஸ்பெஷல்: தெறி (Theri)
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படம் கமர்ஷியலாக செம ஹிட் ஆனது.விஜய்க்கு ஜோடியாக சமந்தா ,எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள்
கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வந்த சத்ரியன் படத்தின் கதை அம்சத்தைத்தழுவி எடுக்கப்பட்ட படம் இது. விஜயின் மகளாக பேபி நைனிகா பிரமாதமாக நடித்திருப்பார்.சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா மற்றும் ஜி.வி. பிரகாஷின் இசை என இப்போதும் ரசிகர்களைக் கவரும் அம்சங்கள் இதில் ஏராளம்.