

இன்றைக்கு நாம் மிகவும் பிரபலமான மற்றும் நெட்பிலிக்ஸில்(Netflix) பார்த்து ரசிக்கக்கூடிய 10 தமிழ் டப்பிங் சீரிஸ்களை பற்றி தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
1. Monster the ed gein story, இந்த கதையில் மொத்தமாக 8 எபிஸோட்கள் உள்ளன. IMDBயில் 7.3 ரேட்டிங் பெற்றுள்ளது. 2025 ல் வெளியான இந்த சீரிஸ் நெகட்டிவ் கேரக்டரான ஹீரோவை பாவமாக காட்டியிருப்பார்கள். ஹீரோ எப்படி சைக்கோவாக மாறியிருப்பான் என்பதே கதை.
2. Adolescence என்ற சீரிஸில் 4 எபிஸோட்களே உள்ளன. இந்த சீரிஸ் IMDBயில் 8.1 ரேட்டிங் பெற்றுள்ளது. மேங்கிங்கில் மிகவும் சூப்பராக இந்த சீரிஸை எடுத்திருப்பார்கள். இந்த கதை சற்று Slow burn story ஆக செல்லும்.
3. Mercy for none என்ற கொரியன் சீரிஸ் IMDB யில் 7.5 ரேட்டிங் பெற்றுள்ளது. நல்ல ஆக்ஷன் சீரிஸ் John wick அளவிற்கு இருக்கும். தம்பியை கொன்றவனை அண்ணன் தேடி பழிவாங்கும் கதை.
வேற லெவலில் இருக்கும் இந்த சீரிஸ். ஆக்ஷன் கதைகள் பிடிக்கும் என்றால், கண்டிப்பாக இந்த சீரிஸ் உங்களுக்கு பிடிக்கும்.
4. Last samurai standing சீரிஸில் மொத்தம் 6 எபிஸோட்களே உள்ளன. IMDB யில் 7.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த சீரிஸை பார்க்கும் போது சாமுராய் காலக்கட்டத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள். இந்த சீரிஸின் கதை என்னவென்றால், சாமுராய்களை மரண விளையாட்டிற்குள் கொண்டு வந்து அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது போல கதைக்களத்தை கொண்டு செல்கிறார்கள். ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
5. American primeval என்ற சீரிஸ் 6 எபிஸோட்களை கொண்டது. IMDBயில் 8 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். இது அமேரிக்கன் Western கான்செப்ட் கொண்ட கதை தான். 1800 காலக்கட்டத்தில் நடப்பது போன்ற கதை. ஒரு குடும்பத்தை சாகடிக்க நிறைய பேர் வந்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களிடம் இருந்து அந்த குடும்பத்தை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.
6. Alice in borderland season 3 சீரிஸ் IMDBயில் 7.8 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த சீரிஸூக்கு என்றே தனி விசிறிகள் இருக்கிறார்கள். முதல் இரண்டு சீசனை ஒப்பிடுகையில் இது சற்று பரபரப்பு குறைந்த மாதிரியே தெரிகிறது. இருப்பினும் மொத்தமாக பார்த்தால் ஆக்ஷன் கலந்த திரில்லரான கதையை கொண்டிருக்கிறது.
7. Wednesday season 2 வில் மொத்தம் 8 எப்பிஸோட்கள் உள்ளன. IMDBயில் 8 ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த சீரிஸில் முதல் சீசன் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.
8. Squid game Season 3 யில் IMDBயில் 8 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். சீசன் 2 தொடர்ச்சியாக சீசன் 3 இருக்கிறது. இதுதான் கடைசி சீசனும் கூட. சென்டிமெண்டாக கதையை கொண்டு செல்கிறார்கள்.
9. Stranger things season 5 ல் மொத்தம் 4 எபிஸோட்களே உள்ளன. இந்த கதை தான் தற்போது நெட்பிளிக்ஸில் டாப்பில் உள்ளது. வில்லியம் கேரக்டருக்கு சக்திகள் கிடைப்பது போல கதையை கொண்டு சென்று முடித்துள்ளனர்.
10. When life gives you tangerines என்ற கொரியன் சீரிஸ் IMDB யில் 9.1 ரேட்டிங்கில் உள்ளது. இதில் மொத்தம் 16 எப்பிஸோட்கள் உள்ளன. இந்த சீரிஸ் மிகவும் எமோஷலான வாழ்க்கையை பற்றி கற்றுத்தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள். மனதை மெல்ல வருடக்கூடிய அழகிய கதையை கொண்டிருக்கும். இந்த 10 சீரிஸூம் நெட்பிளிக்ஸில் தமிழில் டப் செய்யப்பட்டு உள்ளது. நீங்களும் கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்.