நாக சைதன்யாவின் புது லவ்: கொதித்த சமந்தா!

நாக சைதன்யாவின் புது லவ்: கொதித்த சமந்தா!
Updated on

தெலுங்குப் பட சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதல் திருமணம் செய்து 4 வருட மண வாழ்க்கைக்குப் பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்நிலையில் நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலிப்பதாக கூறப்படுகிறது. டோலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்த காதல் கிசுகிசுப்புதான் படு வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து நடிகை சமந்தாவிடம் கருத்து கேட்டபோது பொங்கியெழுந்து காரசாரமாக தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார் சமந்தா.

அவர் யாரை காதலித்தால் என்ன.. கல்யாணம் பன்ணி கொண்டால் எனக்கென்ன? என்னிடம் ஏன் இதுபோன்றவற்றிக் கேட்கிறீர்கள்? போய் ஆக்கபூர்வமாக உங்கள் வேலைகளைப் பாருங்கள். ஒரு பெண்ணைப் பற்றி வதந்திகள் கிளம்பினால் அவை வேண்டுமென்றே சொல்லப் பட்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு ஆண் பற்றிய வதந்தி என்றால், கட்டயாமாக அதை ஒரு பெண் தான் கிளப்பிவிட்டிருக்க வேண்டும். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும்? இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தெளிவாக முன்னேறிவிட்டனர்.. நீங்களும் முன்னேறுங்கள்

இவ்வாறு காரசாரமாக சொல்லியிருக்கிறார் சமந்தா. அவரது இந்தக் கருத்து நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com