மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக இந்த நடிகையா? அப்போ ஹிட்தான்!

Mookuthi Amman
Mookuthi Amman
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில், தற்போது மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தை எடுக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அந்தப் படத்தில் முன்னணி நடிகை நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.

ஒருமூச்சு மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து அம்மன் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். அதன்பின்னர் நீண்டக் காலம் சாமி படங்கள் வராமல் இருந்தன. அப்படி வந்தாலும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் மீண்டும் ஒரு அம்மன் படம் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ரசிக்க செய்தது. குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

Trisha and RJ Balaji
Trisha and RJ Balaji

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பணிகள் ஆரம்பமானது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் அம்மனாக நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஓடிடி பிரியர்களா? இந்த வாரம் ரிலீஸான படங்கள் லிஸ்ட் இதோ... மிஸ் பண்ணாம பாருங்க!
Mookuthi Amman

த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின்மூலம் மீண்டும் சினிமாவில் தனக்கான இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஆகையால், படக்குழு அவரிடம் பேசத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவும் சில படங்களில் மட்டுமே கம்மிட்டாகியுள்ளார். அவர் இப்போது முழுவதுமாக குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆகையால், “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” என்பதுபோல, “நயன்தாரா இல்லன்னா த்ரிஷா” என்று மூக்குத்தி அம்மனாக அவதாரம் எடுக்கவுள்ளாராம் குந்தவை த்ரிஷா.

 

logo
Kalki Online
kalkionline.com