கஜினி 2 படம் குறித்த அப்டேடை ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.
2005ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. ஒரு வித்தியாசமான கதையுடன், பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. காதல், த்ரில்லர் கலந்த இப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இன்றுவரை கஜினி படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுவும் சூர்யாவின் இரு வேறு கெட்டப்கள், மற்றும் நடிப்பு அவரின் கெரியரை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. 100 கோடி வசூலை ஈட்டிய இப்படம், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அமீர்கான், அசின் ஆகியோர் நடித்திருப்பர். ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தியிலும் இயக்கினார். பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பியது. இந்த கதையை நிராகரித்து, இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று 12 ஹீரோக்கள் கூறினார்களாம்.
இப்படிப்பட்ட படம்தான் பட்டி தொட்டி என்றும் பறந்தது. இந்தப் படத்தால்தான் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமானார் வெற்றிக்கண்டார்.
ஆம்! ஹிந்தி ரீமேக்கில் அமீர் கான் வைத்து படம் இயக்கினார். அப்படத்திற்கு பின்னர் மீண்டும் பாலிவுட்டில் சல்மான் கான் வைத்து படம் இயக்கி வருகிறார்.
கஜினியின் தமிழ் படம் ரூ.7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலித்தது. இதற்கிடையில், இந்தி படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 232 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
சமீபக்காலமாக கஜினி 2 பற்றிதான் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “கஜினி 2 குறித்து சில யோசனைகள் செய்துள்ளேன். தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார். சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது.” என்று பேசினார்.