'வாழை' மாரி செல்வராஜின் முதல் கதை. ஆனால், அவர் அதை தனது முதல் படமாக எடுக்கவில்லை... ஏன்?

Vaazhai
Vaazhai
Published on

தரமணி, தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற திரைப்படங்களை இயற்றியவர் இயக்குநர் ராம் அவர்கள். அவர் இயற்றிய படங்களுக்காக அவர் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

அவர் இயற்றிய படங்களில் 2007 ஆம் ஆண்டில் வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படமும், 'வாழை' திரைப்படத்தை போலவே ஒரு சிறப்பான கதைகளம் கொண்ட படம் தான். ஆனால் அது அவரின் முதல் படம் என்பதாலும் அவர் ஒரு புதுமுக இயக்குநர் என்பதாலும் அந்த படம் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதே நிலமை தனது உதவி இயக்குநருக்கும் வந்து விடக்கூடாது என்று எண்ணிய அவர் அவரின் உதவி இயக்குநருக்கு "என்ன தான் இது உனது முதல் கதையாக இருந்தாலும் கூட இதை இப்பொழுது உன் முதல் திரைப்படமாக எடுக்காதே. முதலில் உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிறகு இந்த கதையை திரைப்படமாக எடு" என்று கூறியுள்ளார்.

அந்த உதவி இயக்குநரும் அவரின் குருவான இயக்குநர் ராம் அவர்கள் சொன்னதை நினைவில் வைத்து அவர் சொன்னது போலவே செய்திருக்கிறார்.

ஆம் அன்று இயக்குநர் ராம் சொன்னது சரியே! 'இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை கொண்டாடுகிற நாம் இதுவே அந்த படம் மாரி செல்வராஜின் முதல் படமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் நாம்?'

ஆம் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இப்பொழுது இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜே ஆவார்.

'வாழை' திரைப்படம்:

'வாழை' என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இதை மாரி செல்வராஜ் எழுதி, இயக்கியுள்ளார். 

இந்தத் திரைப்படம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வளரும் ஒரு சிறுவனின் போராட்டங்கள் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அழுத்தமாகச் சித்தரிக்கிறது.  ஓரளவு மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இது குழந்தை பருவத்தின் அப்பாவித்தனத்தையும் வாழ்க்கையில் படும் பாடுகளையும் நேர்த்தியாக பின்னிப்பிணைக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிவாஜியின் இந்தப் படம் ஒரு ரூபாய்கூட வசூலிக்காது… ரஜினி சொன்னாராமே!
Vaazhai

தனது ஏழ்மையான குடும்பத்தை ஆதரிப்பதற்காக வார இறுதிகளில் வாழைத் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவரது பொறுப்புகள் காரணமாக பெரும்பாலும் அடைய முடியாத குழந்தைப் பருவத்தின் எளிய சந்தோஷங்களுக்காக ஏங்குதல் மற்றும் ​​பள்ளி மற்றும் உழைப்பைக் கையாளும் அவரது உள் மோதலை படம் நுட்பமாக ஆராய்கிறது. 

குழந்தைகளின் வாழ்க்கையில் சமூக - பொருளாதார அழுத்தங்களின் தாக்கத்தை எடுத்துரைக்கும் இந்த கதை எளிமையானது ஆனால் சக்தி வாய்ந்தது ஆகும்.

'வாழை' சிறுவனின் போராட்டம் மட்டுமல்ல; கிராமப்புற இந்தியாவில் பலர் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கஷ்டங்களின் பிரதிபலிப்பாகும். 

பார்வையாளர்களை தனது குழந்தைப் பருவ அனுபவங்களுக்குள் கொண்டு செல்லும் மாரி செல்வராஜின் திறன், அதே சமயம் பரந்த சமூகப் பிரச்சினைகளில் அவர்களை அனுதாபம் கொள்ளச் செய்வது, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வளர்ந்து வரும் திறமைக்கு ஒரு சான்றாகும்.

வாழை ஒரு சக்திவாய்ந்த, மனதுள் ஊடுருவிப் பாய்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படம்.

இதையும் படியுங்கள்:
நடிகர் ஸ்ரீக்கு என்னாச்சு? மனநல பாதிப்பா? இறுகப்பற்று தயாரிப்பாளர் ஓபன் டாக்!
Vaazhai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com