கெட்டவார்த்தையில் திட்டிய வனிதா…. ஷாக்கான சமுத்திரக்கனி!

Vanitha and Samuthirakani
Vanitha and Samuthirakani
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின்போது வனிதா கெட்டவார்த்தைப் பேசினார் என்று சமுத்திரக்கனி ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

அந்தகன் – தி பியானிஸ்ட் படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை ஸ்டார் மூவிஸ் தயாரித்துள்ளது. படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது படக்குழு. இதனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து கடந்த 4ம் தேதி படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

இதில் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பேசினர்.

அப்போது சமுத்திரக்கனி பேசியதாவது, “இறைவனுக்கு நன்றி, உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நான் பிரசாந்தை காரணமில்லாமல் நினைப்பேன், அப்போது அவரும் சரியாக போன் செய்துப் பேசுவார். எனக்கு தியாகராஜன் என்றாலே பயம் வந்துவிடும். அவர் போனில் ஹலோ என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்பிற்கு வந்துவிடுகிறேன் சார் என்று சொல்லிவிட்டேன். ஆனால், நேரில் பார்க்கும்போது அவர் பேரன்புடையவர் என்பது தெரியவந்தது.

அதேபோல் படபிடிப்பு தளத்தில், இதுவரை யாரும் என்னைத் திட்டிராத வகையில் கெட்டவார்த்தையில் வனிதா திட்டினார். அவர் திட்டிக்கொண்டே இருக்கும்போது நான் இயக்குநரைப் பார்த்தேன். அவர் என்னிடம் வந்து, நான் சொல்லியதை விடவும் அதிகமாகவே அவர் உங்களைத் திட்டுகிறார் என்றார்.

இதையும் படியுங்கள்:
Review - Mr & Mrs Mahi... கிரிக்கெட் தம்பதிகள் இணையும்போது என்ன நடக்கும்?
Vanitha and Samuthirakani

அதன்பிறகு நான் வனிதாவைப் பார்த்தேன், இயக்குநர்தான் உங்களை இப்படியெல்லாம் திட்ட சொன்னார் என்று இயக்குநரை கைக் காட்டினார்.

இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்திற்கு பின்னர், பிரசாந்த் இன்னும் மும்மடங்கு வளர வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com