ஜோஜூ ஜார்ஜ் - ஷாஜி கைலாஷ் கூட்டணியின் 'வரவு' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

அதிரடி ஆக்சன் நிறைந்த ஷாஜி கைலாஷின் புதிய மலையாளத் திரைப்படம் பற்றிய முழுமையான சினிமா விமர்சனம்.
வரவு விமர்சனம்
வரவு விமர்சனம்
Updated on

வரவு விமர்சனம்: கதையும் களமும் சொல்வது என்ன?

ம்ம ஊரில் லியாகத் அலிகான் எப்படியோ அது மாதிரி கேரளாவில் அரசியல் படங்கள் எடுப்பதில் இயக்குநர் ஷாஜி கைலாஷ் வல்லவர். டாக்டர் பசுபதி (1990) என்ற காமெடிப் படம் மூலம் இயக்குநராக மலையாளப்பட உலகில் அறிமுகமானாலும், ஏகலைவன் மாபியா (1993) ,கமிஷனர் (1994) படங்கள் மூலம் பொலிடிக்கல் திரில்லர் எடுப்பதில் வல்லவர் ஆனார். தமிழில் கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வாஞ்சி நாதன் (2001) என்ற ஹிட் படத்தை இயக்கி இருக்கிறார் .

மழவில் கூடாரம் (1995) என்ற மலையாளப் படத்தில் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக அறிமுகம் ஆன ஜோஜூ ஜார்ஜ், சோலா (2019), ஜோசப் (2018), ரெட்ட (2023) ஆகிய வித்தியாசமான மலையாளப் படங்களில் நடித்தவர். ரெட்ரோ, தக் லைப் போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். நம்ம ஊர் விஜய்சேதுபதி போல யதார்த்தமான நடிகர்.

ஷாஜி கைலாஷ் + ஜோஜூ ஜார்ஜ் இருவரின் காம்போவில் உருவான இந்த வரவு படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

16/7/2026 முதல் கேரளத்திரை அரங்கு களில் ரிலீஸ் ஆன இந்த மலையாளப்படம் ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழகத்தில். 24/7/2026 முதல் வெளியாகி இருக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் அம்மா, அப்பா இல்லாதவன். அவனுக்கு ஒரு அக்கா, இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். வில்லன் ஒரு அரசியல்வாதி. அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை நாயகனின் தம்பி காதலிக்கிறான். இந்த லவ் மேட்டர் தெரிந்ததும் வில்லன் நாயகனின் தம்பியை மிரட்டி அனுப்புகிறான். அடுத்த நாள் நாயகனின் தம்பியைக் காணவில்லை. வேறு ஒரு கேசில் நாயகன் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறான்.10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நாயகன்  10 நாட்கள் பெரோலில் வெளியே வருகிறான்.

நாயகனின் இன்னொரு தம்பி திடீர் என்று எம் எல் ஏ ஆகி விட்டது நாயகனுக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது. வில்லனும் , இன்னொரு தம்பியும் சேர்ந்து தான் தனது தம்பியைக் கொலை செய்து விட்டார்கள் என சந்தேகிக்கிறான். பரோலில் வெளி வந்த நாயகன் 10 நாட்களுக்குள் தன் தம்பியைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதே சமயம் தன்னை ஒரு பொய்க் கேசில் மாட்டி விட்டவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும். இந்த இரண்டையும் நாயகன் எப்படி செய்தான்? என்பதே மீதித்திரைக்கதை.

வரவு விமர்சனம்
வரவு விமர்சனம்

நாயகனாக ஜோஜூ ஜார்ஜ் அதிரடி காட்டி நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் வழக்கம் போல் முத்திரை பதிக்கிறார். ஒரு தம்பியைக் காணவில்லை, இன்னொரு தம்பி துரோகியோ? என மனம் புழுங்கும் காட்சிகள் அருமை.

நாயகனின் அக்காவாக சுகன்யா நடித்திருக்கிறார். அதிக  வாய்ப்பில்லை. வந்தவரை ஓக்கே. வில்லனின் மகளாக, நாயகனின் தம்பியின் காதலியாக வாணி விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

இவர்கள் போக, அர்ஜூன் அசோகன் , தீபக் பரம்போழ், முரளி கோபி, பாபுராஜ், சானியா அய்யப்பன், பைஜூ சந்தோஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அனைவரது நடிப்பும் கச்சிதம். குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை அதிரடி.

ஒளிப்பதிவு ஒடுக்கத்தில் விஸ்வஜித் புழுதி பறக்கும் ஆக்சன் சீக்வன்ஸ்களை நன்கு படமாக்கி இருக்கிறார். ஆர்ட் டைரக்சன் நிமேஷ் தனூர்.

இதையும் படியுங்கள்:
இதயம் முரளி: ஆட்டோகிராப் மற்றும் ஜீன்ஸ் கலவையில் உருவான காதல் காவியமா?
வரவு விமர்சனம்

சுரேஷ் மலையம்கண்டி , மனு மஞ்சித் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத , ராகேஷ் மண்டோடி வசனம் எழுதி இருக்கிறார். இயக்கம் ஷாஜி கைலாஷ்.

சபாஷ் டைரக்டர்

1. ஓப்பனிங்க் சீனிலேயே ஹீரோ ஜெயிலிலிருந்து பரோலில் வெளிவருவது போல் காட்டி இருப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

2. நான்-லீனியர் கட்டில் திரைக்கதை கடந்த காலம் ,நிகழ் காலம் என மாற்றி மாற்றி பயணித்தாலும் சுவராஸ்யம்

3. நாயகன் ஜோஜூ ஜார்ஜ் உட்பட அனைவரது நடிப்பும் அருமை

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. ஆக்சன் சீக்வன்சை முதலில் எழுதிப் படமாக்கிவிட்டு அதற்குப்பின் திரைக்கதை எழுதி இருப்பது போல் தோன்றுகிறது.

2. திரைக்கதையில் மெனக்கெடவில்லை.

3. தம்பியின் காதல் பிடிக்காத அண்ணன் தம்பியைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வலிமையான காரணம் சொல்லப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
வரவு விமர்சனம்

4. வில்லனான அரசியல்வாதி திடீரென நாயகனின் தம்பியை எம் எல் ஏ ஆக்குவது. திடீர் என இனிமே நீ எம் எல் ஏ இல்லை என தீர்ப்பு சொல்வது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

கல்கி கமெண்ட்: ஆக்சன் பிரியர்களுக்கான சராசரி ரிவஞ்ச் திரில்லர். மிஸ்ட்ரி எல்லாம் பெரிதாக இல்லை.

ரேட்டிங்க் 2.5 /5

இந்தப் படத்தின் முழுமையான விமர்சனத்தை வாசிப்பதன் மூலம், நீங்கள் இந்த வார சினிமா திரையரங்குகளில் வரவு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற தெளிவான முடிவை எடுக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com