பதறவைக்கும் அரண்மனை 4 படத்தின் வீடியோ கிளிப்ஸ்… வைரலாகும் வீடியோ!

Aranmanai 4
Aranmanai 4

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3ம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இன்று படத்தின் வீடியோ கிளிம்ஸை படக்குழு வெளியிட்டது. இதனால், X தளத்தில் அரண்மனை 4 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சுந்தர் சி-யின் குடும்பப்படம், திகில் படம் என்றால், அவை தனிச்சிறப்பு வாய்ந்தவைதான். அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 3 பாகங்களும் திகில், நகைச்சுவை, குடும்பம் என அனைத்தின் கலவையாக இருந்தன. சிலருக்கு அரண்மனை படங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றாலும், சிறுவர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. இதனையடுத்து அரண்மனை 4 படத்திற்கு பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டதால், பெரிய எதிர்பார்ப்பையும் தாங்கி நிற்கிறது.

அரண்மனை 4 படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, கோவை சரளா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மற்றொரு பெரிய தூண் என்றால், அது தமன்னா தான். படத்தில் தமன்னாவின் லுக் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆகையால், அவருடைய ரசிகர்களும் படம் வசூலை ஈட்டுவதற்கு துணை புரிவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெள்ளித்திரையில் மீண்டும் மோகன் - ‘கம் பேக்’ கலக்குமா?
Aranmanai 4

அரண்மனை 4 படம் முதலில் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என்று படக்குழு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தது. ஆனால் விஷாலின் ரத்னம் படமும் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டதால், அரண்மனை 4 படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. ஏனெனில், இப்படம் அதிக எண்ணிக்கையிலானத் திரைகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து படம் மே 3ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. குடும்ப ரசிகர்களை கருத்தில் கொண்டும், விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டும் தான் படக்குழு இந்த முடிவை எடுத்தது.

இதனையடுத்து, படக்குழு மேலும் சில நாட்கள் விளம்பர செய்ய திட்டமிட்டுள்ளது என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில், இன்று அரண்மனை 4 படத்தின் 7 Days to go என்ற வீடியோ கிளிம்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. பதற வைக்கும் திகில் வீடியோவுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவால், X தளத்தில் அரண்மனை 4 படம்  ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com