உங்களது மன நிம்மதி உங்கள் கையில்..!


Your peace of mind is in your hands..!
peace of mind...
Published on

வ்வொருவருடைய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் நிரந்தரம் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகின்றன. அவ்வாறு இருக்கும் வாழ்க்கை நடைமுறையில் மன நிம்மதி அடைவதும், அதை தக்கவைத்துக் கொள்வதும் சுலமில்லை. அதே சமயத்தில் கடினமும் அல்ல.

அத்தகைய மன நிம்மதி குறித்து சில முக்கிய விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

. மனத்தை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கின்றது.

. பிறர் அறிவுரை கூறலாம், ஆலோசன அள்ளி தெளிக்கலாம். 

. ஆனால் நீங்கள்தான் செயல்படுத்தி பயன் பெறுவதோ அல்லது சங்கடங்களை சமாளிப்பதோ என்பது ஒதுக்க முடியாத உண்மை.

. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் ஆகும் என்று கூறப்படுவது இங்கு சாலப்பொருந்தும்.

. ஆலோசனை, அறிவுரை கூறுபவர்களில் பெரும் பாலானோர் அனுபவித்திருக்க மாட்டார்கள். படித்ததையோ, கேட்டதையோ அவற்றுடன் அவர்களுக்கு மனதில் பட்டதையோ கூறி பெரிமிதம் கொள்பவர்களே  அதிகம்.

. அதிக நபர்களின் ஐடியாக்கள், ஆலோசனை, அறிவுரைகள் திகட்டுவதுடன் பல சமயங்களில்  பிரச்னைக்கு விடிவு காண வழி வகுக்காமல் பெரும்பாலும் மேலும் குழப்பத்தில் கொண்டு நிறுத்துபவைகளாக  அமையும். மன நிம்மதி அடைவதற்கு பதிலாக மன சங்கடத்திற்கு கொண்டு செல்லும்.

இதையும் படியுங்கள்:
உலகில் பிரச்னை என்று எதுவும் கிடையாது!

Your peace of mind is in your hands..!

. எனவே கூடிய மட்டும் உங்கள்  நம்பிக்கைக்கு பாத்திரமான அனுபவசாலி, உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவரிடம்  மட்டுமே ஆலோசனை கேட்பதோடு நிறுத்திக் கொள்வது பெட்டர். பலனை அளிக்க  அதிக வாய்ப்பும் உண்டு.

. முடிந்த வரையில் பிறர் தலையீட்டை  தவிர்த்தால் உங்கள் மன நிம்மதி கூடும்.

. மனிதர்களின் படைப்பில் புதைந்துள்ள மகத்தான ரத்தினம் உள்மனது.

. உள்மனது அவரவருக்கு தேவையான எச்சரிக்கையை இயல்பாக்கவே அளிக்கும் அரிய ஆற்றல் கொண்டது.

. உள்மனது கூறுவதை கேட்க பழகிக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப நடைமுறை படுத்தினாலே போதும் மனம் சந்திக்க வேண்டிய பல சங்கடங்களை தகர்த்து எரியலாம்.

. மன நிம்மதி பெற எங்கும் செல்ல வேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை.

. உங்களை சுற்றி நடப்பவை எல்லாவற்றையும்  உங்களால் நிறுத்துவும்,  கட்டுப்படுத்தவும் முடியாது.

. உங்கள் மன உறுதியை மேம்படுத்த நடவடிகைகள் எடுக்கவும்.

. செறிவை (concentration power) படிப்படியாக அதிகரிக்க பழகுங்கள்

. ஆராம்பத்தில் மனம் கட்டுக்கு அடங்காது. மனம் தளர்ச்சி அடைய விடக்கூடாது. போகப் போக கட்டுக்குள்  வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
தாக்குப் பிடிக்கவும் தக்க வைத்துக்கொள்ளவும் வித்தியாசமாக யோசியுங்கள்..!

Your peace of mind is in your hands..!

. நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் உடன் செயல்பாடு இவை மனத்தை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவும். (confidence, self confidence, motivating efforts) 

. இதன்   சம்பந்தமான செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கவேண்டும் (on a continuous  basis) என்பதில் தங்களுடைய சுயகட்டுப்பாடு, கடமை உணர்ச்சி மிகவும் பங்கு வகிக்கவேண்டும் என்பது மிக மிக அவசியம் ஆகும். (self control and duty conscious) 

. காலப்போக்கில் உங்களுடைய மனம் எத்தகைய வகை  தொந்தரவையும்  (any kind of disturbances) சமாளிக்கவும், அனாவசியமானவற்றை ஒதுக்கவும்,  கடக்கவும் பக்குவப் பட்டுவிடும்.

. மனநிம்மதி கிடைத்தால் மேலும் ஈடுபட்டு நல்ல வழிகளில் பிறருக்கும், சமூகத்திற்கும் முடிந்த வரையில். உதவவும் வழி  கிட்டும்.

. ஒவ்வொரு பிரச்னைக்கும் முடிவு கிட்டும் என்ற நேர்மறை எண்ணத்தோடு எதிர்கொள்ளும், மன நிம்மதி உடையவர்களால்  சிறப்பாக செயல்படவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com