நானும் விஜயும் உண்மையாகவே அழுதுவிட்டோம் – குஷ்பு!

Vijay and Kushbu
Vijay and Kushbu
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

குஷ்புவும் விஜயும் சேர்ந்து சில படங்கள் நடித்துள்ளனர். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டவை குறித்து குஷ்பு மனம் திறந்துப் பேசியிருக்கிறார்.

விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். இதில் குஷ்புவும் சில காட்சிகள் நடித்ததாகவும், ஆனால், படத்தின் நீளம் கருதி காட்சிகளை நீக்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்தச்சூழலில்தான் சமீபத்தில் குஷ்பு ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசினார். “வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் அமைந்தன. அது ஒரு தனி ட்ராக். மிகவும் சுவாரசியமாகவும் அழகாகவும் இருந்தது. இறுதியில் குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

நான் அந்த படத்தில் விஜயுடன் மட்டும்தான் நடிப்பதுபோல் இருக்கும். வேறு யாருடனுமே காட்சிகள் இல்லை. வம்சி என்னை நேரில் சந்தித்து, படத்தின் நீளம் அதிகமாகவுள்ளது என்றும் அதனால், காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது நான் வம்சியிடம் தயவுசெய்து ஒரு காட்சிகளைகூட வைக்காதீர்கள் என்று கூறிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்தக் காட்சிகளை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அழகான காட்சிகளாகும். உண்மையில், அந்த காட்சிகளை எடுக்கும்போது உண்மையாகவே அழுதுவிட்டோம்.

இதையும் படியுங்கள்:
இயக்குனர் பாரதிராஜா ஒரு சிறந்த படைப்பாளி; ஏன் தெரியுமா?
Vijay and Kushbu

வாரிசு படம் வெளியானதும். நாங்கள் சந்தித்தோம். அப்போது அதுகுறித்து என்னிடம் பேசினார். காட்சிகளை நீக்கியதற்கு வருத்தம் தெரிவித்தார்.” என்று குஷ்பு பேசினார்.

குஷ்பு இந்தக் காட்சிகளை இவ்வாறு வர்ணித்தது, உண்மையில் இப்போதுதான் அந்த காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் அத யூட்யூபிலாவது வெளியிடலாம் அல்லவா?

பின் அவை எப்படிப்பட்ட காட்சிகள் என்று ரசிகர்களே சொல்லிவிடுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com